24 July 2015

வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்

உற்பத்தித் துறையிலும் பொறியியல் துறையிலும் அடுத்த மூன்று மாத காலத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
நாடு முழுவதும் உள்ள 6,130 தொழிலதிபர்களிடம் இந்த ஆய்வு எடுக்கப்பட்டது. அவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் வேலைவாய்ப்புகள் 43 சதவீதம் வளர்ச்சியைக் காணும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தித் துறை மற்றும் பொறியியல் துறைக்கு அடுத்தபடியாக, வங்கி மற்றும் நிதிச்சேவை நிறுவனங்களிலும் (45 சதவீதம்) உள்கட்டமைப்புத் துறையிலும் (44 சதவீதம்) வேலைவாய்ப்புகள் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய அரசின் முன்முயற்சிகளால் உற்பத்தித் துறையிலும் பொறியியல் துறையிலும் நீண்ட காலத்துக்குப் பிறகு வேலைக்கு ஆட்களை எடுக்கிற போக்கு அதிகரித்துள்ளதாக MyHiringClub.com எனும் இணையதளத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார் .
வேலைக்கு ஆட்களை எடுக்கிற போக்கு, பொதுவாக தென்னிந்தியாவில் அதிகமாகவும் (28 சதவீதம்) அடுத்தடுத்த இடங்களில் வடஇந்தியா, மேற்கு இந்தியா, கிழக்கு இந்தியா இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது