26 November 2013

வெளிநாடுகளில் படிக்க கல்வி உதவித்தொகை

ஜப்பானில் பயிற்சி பெற உதவித்தொகை
ஜப்பானில் உள்ள மிகப்பெரிய மின்னணுத் தொழில் நிறுவனமான ஹிட்டாச்சியில், இந்திய மாணவர்கள் உதவித்தொகையுடன் இலவசப் பயிற்சி பெறலாம். இந்த வாய்ப்பை, ‘இந்து’ நாளிதழுடன் இணைந்து ஹிட்டாச்சி நிறுவனம் வழங்குகிறது.

இந்த உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் குறைந்தபட்சம் பி.இ. அல்லது பி.எஸ்சி. (என்ஜினீயரிங்) பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். ஏதேனும் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் ஓர் ஆண்டு முன் அனுபவம் இருந்தால், கூடுதல் தகுதியாகக் கருதப்படும். அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி முப்பது வயதிற்குள் இருக்க வேண்டும்.  கடந்த ஆண்டுகளில் இந்த உதவித்தொகை கோரி விண்ணப்பித்தவர்கள், மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம்.

ஹிட்டாச்சி நிறுவனத்தில் ‘இன்பர்மேஷன் அண்ட் டெலிகம்யூனிக்கேஷன் சிஸ்டம்ஸ்’, ‘பவர் சிஸ்டம்ஸ்’, ‘சோஷியல் இன்ப்ராஸ்ட்ரக்ச்சர் அண்ட் இண்டஸ்ட்ரியல் சிஸ்டம்ஸ்’, ‘டிரான்ஸ்போர்ட்டேஷன் கண்ட்ரோல் சிஸ்டம் என்ஜினீயரிங் (ட்ரென் மேனேஜ்மெண்ட் சிஸ்டம்)’ போன்ற ஏதேனும் ஒரு பிரிவில், அடுத்த ஆண்டு ஜூலையிலிருந்து ஆறு மாதங்கள் பயிற்சி மேற்கொள்ள முடியும்.

இந்த உதவித் தொகை பெற தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு விமான டிக்கெட், தங்குவதற்கான இடம், உணவு வசதிகள் போன்ற அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதுதவிர ஜப்பான் நாட்டிற்குள் மேற்கொள்ளப்படும் பயணச் செலவு மற்றும் சோந்தச் செலவுகளுக்கும் உதவித்தொகை அளிக்கப்படும்.

இந்த உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் இந்தியாவில் உள்ள, ‘இந்து’ பத்திரிகையின் அனைத்து அலுவலகங்களிலும் கிடைக்கும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: டிசம்பர் 31, 2013.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி: THE HINDU - HITACHI TRAINING SCHEME, THE HINDU, 859 & 860, Anna salai, Chennai - 600 002.


டாக்டர் மன்மோகன்சிங் ஸ்காலர்ஷிப்
பிரதமர் மன்மோகன் சிங் படித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஜான் கல்லூரியில் டாக்டர் மன்மோகன்சிங் ஸ்காலர்ஷிப் திட்டத்தின்கீழ் அறிவியல், தொழில் நுட்பம், பொருளாதாரம் மற்றும் சமூக அறிவியல் பிரிவுகளில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ளலாம். இந்த உதவித் தொகை பெறத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, படிப்புக் கட்டணம், போக்குவரத்து கட்டணம், மாதந்திர செலவுத் தொகை, பிரிட்டன்  செல்வதற்கு விசா கட்டணம் வழங்கப்படும்.

இந்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏற்கெனவே கருத்தரங்குகள், ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டிருப்பது விரும்பத்தக்கது. விமான பொறியியல் மற்றும் எரிசக்தித் துறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்கு முன்பு பிரிட்டனில் படிக்காதவராகவும், பிரிட்டிஷ் அரசின் கல்வி உதவித்தொகை பெறாதவராகவும் இருக்க வேண்டும். வயது வரம்பு 35 வயதிற்குள் இருக்க வேண்டும். நன்கு ஆங்கிலம் பேசவும் எழுதவும் தெரிந்தவராக இருக்க வேண்டும். ஆராய்ச்சி வழிகாட்டுதலுக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியரின் ஒப்புதல் பெற்றிருக்கும் பட்சத்தில் எளிதில் உதவித்தொகை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இத்திட்டத்தின்கீழ் தேந்தெடுக்கப்படுகிறவர்கள் செப்டம்பர் அல்லது அக்டோபரில் தனது ஆய்வுப் பணியைத் தொடங்கலாம். இந்தக் கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் வருகிற ஜனவரி 15-ஆம் தேதிக்குள் பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விவரங்களுக்கு: www.admin.cam.ac.uk/students/gradadmissions/prospec/


ஆக்ஸ்போர்டு இந்திரா காந்தி பட்டப்படிப்பு உதவித்தொகை
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக உள்ள சோமெர்வெல்லி கல்லூரியில் மருத்துவ அறிவியல், தத்துவம், சர்வதேச நாடுகளுக்கான உறவு மற்றும் அரசியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பிரிவுகளில் இளநிலைப் பட்டப்படிப்பு படிக்க ஆக்ஸ்போர்டு இந்திரா காந்தி பட்டப்படிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் உதவி பெற விரும்பும் மாணவர்கள் இந்தியப் பல்கலைக்கழகங்களில் இளநிலைப் பட்டப் படிப்பைப் படித்திருக்க வேண்டும். இந்த உதவித் தொகை பெறும் மாணவர்களின் கல்லூரிக் கட்டணம், மாதாந்திரச் செலவுக்கான தொகை என மொத்தம் 13,726 யூரோக்கள் வழங்கப்படும். மாணவர்களின் படிப்புத் திறமையைப் பொருத்து உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்படும். பிரிட்டனில் படிப்பை முடித்தவுடன் இந்தியாவிற்கு வந்துவிட வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.1.2014. ஜனவரியில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் மார்ச் 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விவரங்களுக்கு: https://uni-of-oxford.custhelp.com/app/ask

கணித மாணவர்களுக்கு மாதம் ரூ. 16 ஆயிரம் ஸ்காலர்ஷிப்!

கணிதத்தில் பிஎச்டி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு மாதம் ரூ.16 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்குகிறது மத்திய அரசு கல்வி நிறுவனம். இந்த உதவித்தொகை பெற விரும்பும்  பிஏ, பிஎஸ்சி, பிடெக், பிஇ, எம்ஏ, எம்எஸ்சி மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது

த்திய அரசின் அணுசக்தித் துறையினால் தொடங்கப்பட்டதுதான் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேத்மேட்டிக்ஸ். மும்பையில் 1983-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தக் கல்வி நிறுவனம், கணிதம் தொடர்பான ஆராய்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது. 2014-15 கல்வி ஆண்டில், கணிதப் பாடத்தில் பிஎச்டி ஆராய்ச்சிப் படிப்பில் சேருவதில் ஆர்வம் மிக்க மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையுடன் படிக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது இந்த அமைப்பு.

இந்த உதவித் தொகையைப் பெற என்ன தகுதி இருக்க வேண்டும்?

பிஏ, பிஎஸ்சி, பிடெக், பிஇ, எம்ஏ, எம்எஸ்சி பட்டப் படிப்புகளைப் படித்த மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்புகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாணவர்கள் பிளஸ் டூ வகுப்பிலிருந்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, நல்ல மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பிஎஸ்சி ஆனர்ஸ் படிப்பு மாணவர்களும் இந்தக் கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.

இந்த கல்வி உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்கள் நேஷனல் போர்டு ஆஃப் ஹையர் மேத்மேட்டிக்ஸ் அமைப்பு நடத்தும் எழுத்துத் தேர்வை (ஸ்கிரீனிங் டெஸ்ட்) எழுத வேண்டும். வருகிற ஜனவரி 25-ஆம் தேதி நடைபெறும் இத்தேர்வை சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் எழுதலாம். கணிதத்தில் முதுநிலைப் படிப்பு நிலையில் உள்ள பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். இரண்டரை மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வில் குறுகிய விடைகளை அளிப்பதற்கான கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வில் தகுதி பெறும் மாணவர்கள், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு, அதில் தகுதி பெறும் மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை அளிக்கப்படும். கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வு வினாத்தாள்கள் நேஷனல் போர்டு ஆஃப் ஹையர் மேத்மேட்டிக்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதனைப் பார்த்து, இத்தேர்வு வினாக்கள் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

சென்னையில் உள்ள மேட் சயின்ஸ் இன்ஸ்டிட்யூட், அலகாபாத்தில் உள்ள ஹரீஷ் சந்திரா ரிசர்ச் இன்ஸ்டிட்யூட், புனேயில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுக்கேஷன் அண்ட் ரிசர்ச் ஆகிய கல்வி நிறுவனங்களில் பிஎச்டி படிக்க விரும்பும் மாணவர்களும் இத்தேர்வை எழுத வேண்டும்.

மாணவர்களுக்கு எவ்வளவு உதவித் தொகை வழங்கப்படும்?

இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு முதல் இரண்டு ஆண்டுகளில் மாதம் ரூ.16 ஆயிரம் வீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். அதைத் தொடர்ந்த ஆண்டுகளில் மாதம் ரூ.18 ஆயிரம் வீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். அத்துடன் இதர படிப்புச் செலவுகளுக்காக ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். தகுதியுடையவர்களுக்கு மத்திய அரசின் விதிமுறைப்படி, வீட்டு வாடகை அலவன்ஸ் வழங்கப்படும். மொத்தம் நான்கு ஆண்டுகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் படிப்புத் திறனைப் பொருத்து, இந்த உதவித் தொகை அடுத்த ஆண்டுக்கு நீட்டிக்கப்படும். தகுதியுடையவராக இருந்தால் இந்த உதவித் தொகை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும். இந்த உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் கணிதத்தில் பிஎச்டி படிக்க பதிவு செய்ய வேண்டும். எந்தக் கல்வி நிறுவனத்தில் மாணவர் சேருகிறாரோ, அந்தக் கல்வி நிறுவனம் மூலம் இந்த உதவித் தொகை வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேஷனல் போர்டு ஆஃப் ஹையர் மேத்மேட்டிக்ஸ் கல்வி நிலையத்துக்கு அனுப்பக் கூடாது. ஐந்து மண்டலங்களில் உள்ள ஒருங்கிணைப்பாளர்களுக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். மாணவரின் பெயர், பிறந்த தேதி, முகவரி, படிப்பு விவரங்கள், தேர்வு எழுத விரும்பும் இரு மையங்கள் போன்று விளம்பர அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள மாதிரி விண்ணப்பப்படி உரிய விவரங்களுடன் தனித்தாளில் பூர்த்தி செய்து புகைப்படத்தையும் ஒட்டி அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தின் இரண்டு பிரதிகள் அனுப்பப்பட வேண்டும். விண்ணப்ப உறையில் ‘NBHM Ph.D Scholarship  என்று குறிப்பிட வேண்டும். அத்துடன் ரூ.5 மதிப்புள்ள தபால் தலை ஒட்டிய சுயவிலாசமிட்ட உறையையும் இணைத்து அனுப்ப வேண்டும். பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த (மண்டலம்-5) மாணவர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்:

Prof. S. Kesavan
Institute of Mathematical Sciences,
CIT Campus
Taramani, Chennai - 600 113.
Email: kesh@imsc.res.in

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 9-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்வு எழுத, தகுதி படைத்த மாணவர்களுக்கு ஜனவரி 6-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி ஹால் டிக்கெட் அனுப்பி வைக்கப்படும். அவ்வாறு, ஹால் டிக்கெட் கிடைக்காத மாணவர்கள் சம்பந்தப்பட்ட மண்டல ஒருங்கிணைப்பாளரைத் தொடர்பு கொள்ள வேண்டும். கணக்கில் ஆர்வமிக்க மாணவர்களுக்கு அதே துறையில்  உதவித் தொகையுடன் பிஎச்டி படிக்க நல்ல வாய்ப்பு இது.

விவரங்களுக்கு:  www.nbhm.dae.gov.in

National Seminar on ModernTrends in Chemistry (MTC-2013) at Dept .of Chemistry, BIT, Trichy

Date of the Seminar: 17.12.2013 & 18.12.2013 

About the Seminar
The seminar aims at exploring the potential research areas and modern trends in Chemistry. The theme of the seminar is accomplished by focusing the challenges and issues in view to create a research ambience among the students, research scholars and faculty members. Research in the field of synthetic organic, inorganic, electrochemistry, polymers, nanoscience, sensors, catalysis, and chemical kinetics will be discussed.