23 June 2014

எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகள்

சென்னையிலுள்ள தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழகத் துறைகள், சென்னைப் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. பட்டப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்.

எம்.பி.ஏ. படிப்புக்கான  கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் இளநிலைப் பட்டம் பெற்றவராக இருக்கவேண்டும். பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பி.பார்ம் ஆகிய தொழில் படிப்புகளில் இளநிலைப் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அரசு ஒதுக்கீட்டுப் பிரிவினராக இருந்தால் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.    

எம்.சி.ஏ. படிப்புக்கான கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், கணிதத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்து, பட்டம் பெற்றிருக்கவேண்டும். பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும். அரசு ஒதுக்கீட்டுப் பிரிவினராக இருந்தால் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும்.

எம்.சி.ஏ.லேட்டரல் என்ட்ரிக்கான கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், கணிதத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்து பி.சி.ஏ. அல்லது பி.எஸ்சி. பட்டம் பெற்றிருக்க வேண்டும். பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும். அரசு ஒதுக்கீட்டுப் பிரிவினராக இருந்தால் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய டான்செட் 2014 நுழைவுத் தேர்வில் சிறப்பிடம் பெற்றிருக்க வேண்டும்.

10-ஆம் வகுப்பு, பிளஸ் டூ அல்லது டிப்ளமோ படிக்காமல் நேரடியாக பட்டப் படிப்பை முடித்தவர்கள் இந்தப் படிப்பில் சேர முடியாது. தொலைநிலைக் கல்வி முறையில் பி.இ., பி.டெக், எம்.சி.ஏ., எம்.எஸ்சி. பட்டம் பெற்றவர்களும் இப்படிப்பில் சேர முடியாது. பி.இ., பி.டெக். அல்லது எம்.சி.ஏ. படிப்புகளில் லேட்டரல் என்ட்ரி முறையில் படித்து பட்டம் பெற்றவர்கள் நீங்கலாக வேறு படிப்புகளில் லேட்டரல் என்ட்ரி முறையில் படித்து பட்டம் பெற்றவர்களும் இப்படிப்பில் சேர முடியாது.

விண்ணப்பங்களை சென்னை மாநிலக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் அந்தந்த ஊர்களிலுள்ள அரசு கலைக் கல்லூரிகளிலும் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பங்களைப் பெற விரும்புவோர், தேசிய மயமாக்கப்பட்ட அல்லது செட்யூல்டு வங்கியிலிருந்து, ரூ.300-க்கான டி.டி.யை The Secretary, TamilNadu MBA/MCA Admissions 2014, Government College of Technology, Coimbatore’ என்ற பெயரில், கோவையில் மாற்றத்தக்க வகையில் எடுத்து அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.150.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2014