3 November 2015

கல்வி உதவித்தொகைத் திட்டங்கள்

பேஸ்புக் நிறுவனத்தின் ஆய்வுப் படிப்புக்கான உதவித்தொகைத் திட்டம்.
கணினி அறிவியல், கணினி பொறியியல், எலக்ட்ரிக்கல்ஸ் பொறியியல் போன்ற பொறியியல் படிப்புகளில் டாக்டர் பட்டத்துக்கான ஆய்வுகளைச் செய்யும் மாணவர்களுக்குக் கிடைக்கும்.
தகுதி: டாக்டர் பட்டத்துக்காக முழுநேரமாக ஆய்வு செய்யும் மாணவர்கள்
ஆன்லைனில்தான் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு வருடத்துக்கு 37 ஆயிரம் டாலர்கள் உள்படப் பல உதவிகள் உண்டு.
மேலும் தகவல்களுக்கு: http://www.b4s.in/plus/FFP385

INTACH கல்வி உதவித்தொகைத் திட்டம்
இந்திய மரபுச் செல்வங்களை பாதுகாக்க விரும்புகிற எந்த ஒரு தனிப்பட்ட ஆய்வாளருக்கும் இன்டாக் நிறுவனம் உதவித்தொகைகளை வழங்குகிறது. தபால் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்
தொடர்புக்குhttp://www.b4s.in/plus/IS638

மோட்டோரோலாவின் ஆய்வாளர் உதவித் தொகைத் திட்டம்
பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் கிராமப்புற மாணவர்கள், கணினி அறிவியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஆரோக்கியம், பெண்களின் உழைப்பைக் குறைக்கக் கூடிய தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட ஆய்வுத் திட்டங்களுக்கு இந்த உதவி கிடைக்கும்.
இளங்கலை பொறியியல் மற்றும் முதுகலை கணினி அறிவியல் படிக்கிற இறுதியாண்டு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இமெயில் மற்றும் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் தகவல்களுக்கு: http://bit.ly/1Muj5PF