28 September 2014

இந்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு

இந்திய ரயில்வே துறை ஜூனியர் இன்ஜினீயர், சீனியர் செக்‌ஷன் இன்ஜினீயர் உள்ளிட்ட 6101 காலிப் பணியிடங்களை நிரப்பவுள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. உரிய தகுதியுடையோர் ஆன்லைனில் 20.09.2014 முதல் 19.10.2014 வரை விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள்: 6101.
வயது: 01.01.2015 அன்று, ஜூனியர் இன்ஜினீயர் பணிக்கு 18-33 வயதுக்குள்ளும், சீனியர் இன்ஜினீயர் பணிக்கு 20-35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் போன்றோருக்கு அரசின் விதிமுறைகளின்படி வயது வரம்பில் சலுகைகள் உண்டு.
கல்வித் தகுதி: அறிவிக்கையில் வெளியான அட்டவணையில் உள்ள பணிகளுக்கு உரிய கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இன்ஜினீயரிங்கில் பட்டயப் படிப்போ, பட்டப் படிப்போ பெற்றிருக்க வேண்டும். கல்வித் தகுதி குறித்த முழு விவரங்களும் அறிவிக்கையில் வெளியாகியுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள். சிறுபான்மையினர், பொருளாதார ரீதியாகப் பிற்படுத்தப்பட்டோர் அதாவது ரூ.50,000க்கு குறைவான ஆண்டுவருமானம் கொண்டோர் ஆகியோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. பிறர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். இதை ஆன்லைன் பேங்கிங் மூலமாகவோ வங்கி செலான் மூலமாகவோ அஞ்சலகத்திலோ செலுத்தலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஜூனியர் இன்ஜினீயர் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு 14.12.2014 அன்றும் சீனியர் செக்‌ஷன் இன்ஜினீயர் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு 21.12.2014 அன்றும் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: உரிய தகுதியுடையோர் ஜூனியர் இன்ஜினீயர் பணிகளுக்கோ சீனியர் செக்‌ஷன் இன்ஜினீயர் பணிகளுக்கோ ஏதாவது ஒரு ஆர்ஆர்பி இணையதளத்தில் (http://www.rrbald.gov.in/ ) ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் பிரிண்ட் அவுட்டை ஆர்ஆர்பி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டியதில்லை. எழுத்துத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை ஆல்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கடைசி நாள்: விண்ணப்பிக்க கடைசி நாள் 19.10.2014.
கூடுதல் விவரங்களுக்கு: http://www.rrbald.nic.in/