29 April 2014

பெட்ரோலியத் துறையில் பி.டெக். படிப்புகள்!

பெட்ரோலியத் துறையில் பி.டெக். படிக்க விரும்பும் பிளஸ் டூ படித்த மாணவர்கள், டேராடூனில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் பெட்ரோலியம் அண்ட் எனர்ஜி ஸ்டடீஸ் நடத்தும் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.

த்தரகாண்ட் மாநிலம் டேராடூனிலுள்ள  யுனிவர்சிட்டி ஆஃப் பெட்ரோலியம் அண்ட் எனர்ஜி ஸ்டடீஸ் கல்வி நிலையத்தில் பெட்ரோலியம், கேஸ், கெமிக்கல், ஜியோ-சயின்ஸ், ஜியோ-இன்பர்மேட்டிக், ஏரோஸ்பேஸ், ஆட்டோமோட்டிவ், எலெக்ட்ரானிக்ஸ், மெகட்ரானிக்ஸ், ஃபயர் அண்ட் சேப்டி, மெட்டீரியல் சயின்ஸ், ஏவியானிக்ஸ், சிவில், பவர் சிஸ்டம், மைனிங்,  டெக்னோ லீகல், சூப்பர் ஸ்பெஷலைஸ்டு கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் வித் ஸ்பெஷலைசேஷன் இன் டெலிகாம் இன்பர்மேட்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளில் பி.டெக். படிப்புகள் உள்ளன. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், பிளஸ் டூ தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப் பிரிவுகளில் சேர்த்து குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

ஷில்லாங்கிலுள்ள  யுனிவர்சிட்டி ஆஃப் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மெண்ட் கல்வி நிலையத்தில் பெட்ரோலியம், எலெக்ட்ரானிக்ஸ், சிவில், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் வித் ஸ்பெஷலைசேஷன் இன் கிளவுட் கம்ப்யூட்டிங் அண்ட் வெர்ச்சுவலைசேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் பி.டெக். படிக்கலாம். 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், பிளஸ் டூ தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப் பிரிவுகளில் சேர்த்து குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

இந்த இரு கல்வி நிறுவனங்களிலும் உள்ள படிப்புகளில் சேர்க்க UPESEAT  என்கிற பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். ஆக்ரா, அலகாபாத், சென்னை, தில்லி, ஹைதராபாத், பெங்களூர் உள்ளிட்ட பல நகரங்களில் நுழைவுத் தேர்வு நடைபெறும். அப்ஜெக்ட்டிவ் முறையில் நடைபெறும் நுழைவுத் தேர்வில் கணிதம், வேதியியல், இயற்பியல் போன்ற பாடங்களிலிருந்து தலா 50 கேள்விகள் கேட்கப்படும். ஆங்கில காம்ப்ரிஹென்சனில் 30 கேள்விகளும், கரண்ட் அபையர்ஸ் அண்ட் அவேர்னஸ் பிரிவில் 20 கேள்விகளும் கேட்கப்படும். மொத்தம் 200 மதிப்பெண்கள். மூன்று மணி நேரங்களுக்குத் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிப்பது எப்படி?: இந்த நுழைவுத் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.1,750. இதை கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலமாக விண்ணப்பத்துடன் செலுத்த வேண்டும் அல்லது குறிப்பிட்ட சில நகரங்களில் உள்ள ஆக்ஸிஸ் வங்கிக் கிளைகளில் ரூ.1,750-ஐ ரொக்கமாகச் செலுத்தி விண்ணப்பத்தையும், விளக்கக் குறிப்பேட்டையும் பெற்றுக் கொள்ளலாம் அல்லது ரூ.1,850-க்கான டிமாண்ட் டிராப்ட்டை ‘க்கஉகு UPES Fee Account ‘ payable at New Delhi / Dehradun   என்கிற பெயருக்கு எடுத்து அனுப்பி பெற்றுக்கொள்ளவேண்டும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து பிரிண்ட் அவுட் எடுத்து, தில்லியில் உள்ள என்ரோல்மெண்ட் அலுவலகத்திற்கோ அல்லது டேராடூனில் உள்ள அலுவலகத்திற்கோ கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.05.2014
நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி24.05.2014
விவரங்களுக்கு: www.upes.ac.in