21 March 2014

கோடைகாலப் பயிற்சி

 நாட்டிலேயே முக்கியத்துவம் வாய்ந்த அறிவியல் கல்வி நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் கல்வி நிறுவனத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மாணவர்களுக்கு கோடை கால விடுமுறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. உயிரியல், இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் எம்எஸ்சி முதல் ஆண்டு அல்லது 2012-13 ஆண்டுகளில் பிஇ, பிடெக் அல்லது அதற்கு இணையான பட்டப் படிப்புகளில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களும் இந்த கோடை காலப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.

இந்த கோடை கால ஃபெல்லோஷிப் திட்டத்தின் கீழ் சேரத் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் தங்களது கல்லூரி அல்லது இருப்பிடத்திலிருந்து இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் கல்வி நிறுவனத்திற்கு வந்து போவதற்கு இரண்டாம் வகுப்பில் ரயிலில் பயணம் செய்வதற்கான அலவன்ஸ் வழங்கப்படும். தங்குமிடமும் உணவும் இலவசம். பயிற்சிக்கு வரும் மாணவர்களுக்கு ஃபெல்லோஷிப்பாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். புத்தகங்கள் வாங்குவதற்காக ரூ.1,500 வழங்கப்படும்.

இந்தப் பயிற்சியில் சேரத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு மே, ஜூன் மாதங்களில் ஒரு மாத காலம் பயிற்சி இருக்கும். பயிற்சிக் காலத்தில் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் கல்வி நிறுவனத்தில் உள்ள ஆசிரியர்களுடன்  இணைந்து ஆராய்சிப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். இதன் மூலம் ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை மாணவர்கள் அறிந்துகொள்ள முடியும். இந்தப் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிலையத்தின் இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

அதனைப் பூர்த்தி செய்து, பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிலையத்தின் உதவிப் பதிவாளருக்கு (அகாதெமிக்) அனுப்பி வைக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாது. ‘IISC Summer Fellowship in Science and Engineering for SC/ST students - 2013’ என்று விண்ணப்பத்தை அனுப்பும் உறையில் குறிப்பிட வேண்டும்.

விவரங்களுக்குhttp:/www.iisc.ernet.in