Pages
- About Us
- Library Services
- Library Working Hours
- Rules and Regulations
- Collections
- E-Resources
- Open Access Dictionaries/Encyclopedia
- Open Access E-Books
- Open Course Wears
- Open Access IR
- Free IEEE Journals
- Open Access E-Journals
- Open E-Theses
- News Papers
- Ongoing Research Projects
- Centre For Research
- Conferences & Workshops
- Discussion Forums
- BIT Media Library
- NPTEL Video Lectures
- BIT-Library Youtube Channel
- E-Learning Lectures
- UPSC jobs
- TNPSC Jobs
- Educational Loans & Scholarships
- Engineering Calculator
- Photogallery
- GATE preparation Apps & Papers
- E-Question Bank
- Staff Profile
- Contact Address
24 February 2014
21 February 2014
20 February 2014
விசா பெற வழிகாட்டும் வலைத்தளம்!
வெளிநாட்டு பயணங்களைத் திட்டமிடும்போது எழக்கூடிய முக்கிய கேள்வி, விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவை.
முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகு விசாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி என அறிய வேண்டும். ஒரு சில நாடுகளுக்கு விசா தேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொருத்தவரை முன்கூட்டியே விசா பெற வேண்டும். நாடுகளுக்கு நாடு இது மாறக்கூடியது.
குறிப்பிட்ட சில நாடுகள் மட்டும் விசா இன்றி வரும் சலுகையை வழங்குகின்றன. இப்படி விசாவுக்கான நடைமுறைகள் பல இருக்கின்றன.
இந்தத் தகவல்களை எல்லாம் தேடி இணையத்தில் அங்கும் இங்கும் அல்லாடாமல், ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் விசாமேப்பர்.காம் (http://www.visamapper.com) வலைத்தளம் அமைந்துள்ளது.
எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் விசா இல்லாமல் செல்லலாம், எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் அங்கே போய் சாவகாசமாக விசா வாங்கலாம் போன்ற தகவலகளை இந்தத் தளம் தருகிறது. அதுவும் எப்படி.., அதிகம் தேடாமல் எடுத்த எடுப்பிலேயே தெரிந்து கொள்ளும் வகையில் அழகாக உலக வரைபடத்தின் மீது விசா விவரங்களை புரிய வைக்கிறது.
இந்த தளத்தில் தோன்றும் உலக வரைபடத்தில் நாடுகள் பல்வேறு வண்ணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அந்த வண்ணங்களுக்கான அர்த்தம் அருகே உள்ள கட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வண்ணங்களை வைத்தே குறிப்பிட்ட ஒரு நாட்டின் விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு பச்சை வண்ணத்தில் மின்னும் நாடுகளுக்கு அங்கே போய் விசா பெறலாம். மெரூன் நிறம் என்றால் முன்னதாகவே விசா பெற வேண்டும். வெளிர் பச்சை என்றால் விசாவே வேண்டாம். மஞ்சள் வண்ணம் என்றால் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சிவப்பு என்றால் விசாவே கிடையாது.
ஆக, இந்த வரைபடத்தை பார்த்தே ஒருவர் பயணம் செய்ய உள்ள நாட்டிற்கான விசா முறை என்ன என அறிந்து கொள்ளலாம். இந்த வரைபடத்தில் மேலும் ஒரு சிறப்பம்சம், நீங்கள் தேடக்கூட வேண்டாம், அதுவாகவே விவரங்களை காட்டுகிறது என்பது தான். அதாவது இந்த தளத்தில் நுழைந்ததுமே, பயனாளி எந்த நாட்டிலிருந்து விவரங்களைத் தேடுகிறார் என புரிந்து கொண்டு அந்த நாட்டுக்கான விசா நடைமுறையை வரைபடமாக காட்டுகிறது.
உதாரணத்திற்கு இந்தியாவில் இருந்து பயன்படுத்தும் போது, இந்தியாவுக்கான இடம் குடியிருக்கும் நாடு என காட்டப்படுகிறது. இந்தியர்களுக்கு மற்ற நாடுகள் எப்படி விசா தருகின்றன என்பது வண்ணங்களாக காட்டப்படுகிறது. ஆக, பயனாளி வேறு நாட்டில் இருந்து அணுகும் போது அவரது நாட்டுக்கான விசா வரைபடம் தோன்றும். அற்புதம் தான் இல்லையா?
அதே நேரத்தில் வரைபடத்தின் மீது உள்ள, 'நான் இந்த நாட்டு குடிமகன்' என குறிக்கும் கட்டத்தில் ஒருவர் தனக்கான நாட்டை தேர்வு செய்து பார்த்தால் அந்த நாட்டுக்கான உலக விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். இந்த பகுதியில் பல்வேறு நாடுகளை கிளிக் செய்து பார்த்தால் எந்த எந்த நாடுகள் எந்த எந்த நாடுகளுக்கு விசா சலுகை அளிக்கின்றன போன்ற தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். உலக அரசியலை அறிவதற்கான சின்ன ஆய்வாகவும் இது அமையும். உலக அரசியல் யாதார்த்ததையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
விசா பற்றி அறிய விரும்புகிறவர்களுக்கு இந்த தளம் நிச்சயம் உதவியாக இருக்கும். ஆனால் ஒன்று, இது ஒரு வழிகாட்டித் தளமே. இதில் உள்ள விவரங்களை அதிகாரபூர்வமானதாக கொள்வதற்கில்லை. தகவலை எளிதாக தெரிந்து கொண்டு அதனை அதிகாரபூர்வ தளங்களின் வாயிலாக உறுதி செய்து கொள்வது நல்லது. மேலும் இந்த தளத்திலேயே, விடுபட்டிருக்கும் நாட்டை சேர்கக அல்லது பிழையான தகவலை சரி செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
இதைப் போலவே விசாமேப்.நெட் (http://www.visamap.net) எனும் வலைத்தளமும் விசா தொடர்பான தகவல்களை வரைபடம் மூலம் தருகிறது. விசா தகவல்களோடு தூதரக அலுலகங்கள் எங்கே உள்ளன போன்ற தகவல்களையும் அளிக்கிறது. விசா நோக்கில் பிரபலமான நாடுகளின் பட்டியலும் இருக்கிறது. ஐபோனுக்கான செயலி வடிவமும் இருக்கிறது. ஆனால் இந்த தளமும் வழிகாட்டி நோக்கிலானது தான். இதில் உள்ள தகவல்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வெளிநாட்டுக்கு போக ஆசைப்படுபவர்களுக்கும், போக இருப்பவர்களுக்கும் இந்தத் தளங்கள் பயனுள்ளவைகளாக இருக்கின்றன.
19 February 2014
Manager & Officer Posts from GAIL (India)
GAIL Recruitment 2014 – Apply Online for Manager & Officer Posts: GAIL (India) Limited has posted employment notification for the recruitment of 12 Manager (F & S), Deputy Manager (F & S) and Senior Officer (F & S) posts. Eligible candidates may apply online from 12-02-2014 by 11.00 hrs to 04-03-2014 by 18.00 hrs and send hard copy of applications on or before 19-03-2014. Other details like age limit, educational qualification, selection process, how to apply are given below…
GAIL Vacancy Details:
Total No of Posts: 12
Name of the Posts:
1. Manager (F & S): 02
2. Deputy Manager (F & S): 08
3. Senior Officer (F & S): 02
1. Manager (F & S): 02
2. Deputy Manager (F & S): 08
3. Senior Officer (F & S): 02
Age Limit: Candidates age should not more than 37 years for Post 1, 34 years for Post 2 and 30 years for Post 3 as on 04-03-2014. Age relaxation is 05 years for SC/ ST/ PWD-General, 03 years for OBC, 08 years for PWD-OBC (NCL) and 10 years for PWD-SC/ ST candidates.
Educational Qualification: Candidates must possess Bachelor degree in Engineering in Fire/ Fire & Safety with minimum 60% marks (55% marks for SC/ ST candidates) and have one year Diploma in Industrial Safety from a Central/ Regional Labour Institute with relevant experience.
Selection Process: Candidates will be selected based on Physical Endurance Test, Group Discussions and/or Interview.
Application Fee: Candidates need to Pay Non-Refundable Rs.200/- for General and OBC (Non Creamy Layer) candidates (No Fee for SC/ ST/ PWD candidates) by Demand Draft/ Pay Order drawn in favour of GAIL (India) Limited payable at New Delhi.
How to Apply: Eligible candidates may apply online through GAIL website www.gailonline.com from 12-02-2014 by 11.00 hrs to 04-03-2014 by 18.00 hrs. After applying online, candidates are required to download and take print out of application with system generated Unique Registration Number, affix photograph with sign across it and send the application along with attested true copies of date of birth proof, caste certificate in prescribed format, mark sheets, degree, diploma certificates starting from matriculation onwards, NOC from current employer and Demand Draft, in a sealed envelope superscribed with “Application for the Post of “_________” [Post, Regn.No and Category: SC/ ST/ OBC (NCL)/ PWD as the case may be] by ordinary post to Sr.Manager (HRD). GAIL (India) Limited, GAIL Bhawan, 16, Bhikaiji Cama Place, R.K.Puram, New Delhi 110066 on or before 19-03-2014.
Instructions for Applying Online:
1. Log on to the website www.gailonline.com.
2. Click on Careers—> Applying to GAIL—> Current Openings.
3. Select the Post and go to Click here to Apply Online.
4. While applying online, Candidates should have valid e-mail id.
5. Candidates use Internet explorer 6.0 to 9.0 version or Mozilla Firefox 1 & above version.
6. Click on Current Openings and registration, choose the post and if you had already registered then apply else register yourself.
7. After registration, fill all the mandatory details and submit the application form.
8. Then system will generate Unique registration number along with application form.
9. Take print out of application form and send it along with mentioned documents.
Important Dates:
Starting Date for Submission of Online Applications: 12-02-2014 by 11.00 hrs.
Closing Date for Submission of Online Applications: 04-03-2014 by 18.00 hrs.
Last Date for Receipt of Hard Copy of Applications: 19-03-2014.
Closing Date for Submission of Online Applications: 04-03-2014 by 18.00 hrs.
Last Date for Receipt of Hard Copy of Applications: 19-03-2014.
Click here for Notification
Click here for Application
Project Scientist, Asst & PA Posts from IIT Delhi
Indian Institute of Technology (IIT), Delhi has given a notification for the recruitment of Project Scientist, Project Associate and Senior Project Assistant posts to work on project titled “Development and Demonstration of Hydrogen Fueled Internal Combustion Engines for Vehicles” funded by New and Renewable Energy at the Centre for Energy Studies. Eligible candidates may send their applications on or before 20-02-2014 by 05.00 PM. Other details like age limit, educational qualification, selection process, how to apply are given below…
IIT Delhi Vacancy Details:
Name of the Posts:
1. Project Scientist
2. Project Associate
3. Senior Project Assistant
1. Project Scientist
2. Project Associate
3. Senior Project Assistant
Educational Qualification: Candidates must possess 1st Class M.Tech or B.Tech in Mechanical/ Automobile Engineering for Post 1, 1st Class B.Tech in Mechanical Engineering for Post 2 and Diploma in Mechanical Engineering or I.T.I (02 years duration) for Post 3 with relevant experience.
Selection Process: Short listed candidates will be called for Interview.
How to Apply: Eligible candidates may send their duly filled applications in prescribed format as per Form No. IRD/ REC-4, download from IRD website http://ird.iitd.ac.in/rec_stud_assistantship along with complete information regarding educational qualification and work experience, and mention Advertisement No & Post Applied for on the left side of application, send by post to The Assistant Registrar, IRD Unit, IIT Delhi, Hauz Khas, New Delhi-110016 on or before 20-02-2014 by 05.00 PM (For more details Contact Prof/ Dr. L.M.Das, Centre for Energy studies at e-mail id: lmdas@ces.iitd.ac.in).
Last Date for Receipt of Applications: 20-02-2014 by 05.00 PM.
Click here for Notification
Click here for Application
18 February 2014
பிரிட்டனில் படிக்க என்ன செய்யலாம்?
வெளிநாட்டிற்குச் சென்று உயர் கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வம் இன்றைய இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. கூடவே, அதற்கான திட்டமிடல்களும், தேடல்களும் அதிகரித்து வருகின்றன. வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்று விரும்புபவர்களின் முதல் இரண்டு சாஸ்களில் அமெரிக்காவும், இங்கிலாந்தும் முக்கிய இடத்தில் உள்ளன. ஆண்டுக்கு சுமார் 4.30 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி கற்பதற்காக பிரிட்டனுக்குச் செல்கிறார்கள். இதில் இந்திய மாணவர்கள் சுமார் 30 ஆயிரம் பேர்.
பிரிட்டனில் முதுநிலை பட்டப் படிப்பு படிக்க இந்திய மாணவர்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருவதற்கு முக்கியமாக இரண்டு காரணங்களைக் கூறலாம். இந்தியாவைப்போல் அல்லாமல், அங்கு ஓராண்டு காலத்திற்குள் முதுநிலை பட்டப் படிப்பை முடித்துவிடலாம் என்பதே அதற்குக் காரணம். அத்துடன் பிரிட்டனில் தங்கி படித்துக் கொண்டிருக்கும்போதே பகுதி நேர வேலை பார்த்து, தங்களது அன்றாட வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்கும் அளவுக்கு சம்பாதிக்க முடியும் என்பதும் ஒரு காரணம். மிகச் சிறந்த பிரிட்டன் பல்கலைக்கழகங்களில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளும் பிரகாசமாக இருக்கும்.
இந்திய மாணவர்களின் ஆர்வத்துக்கு தீனி போடும் வகையில் பிரிட்டனைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் பங்கேற்கும் கல்விக் கண்காட்சி சென்னையில் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்த ஆண்டு சென்னையில் நடந்த கண்காட்சியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று தங்களது சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டனர்.
யுனிவர்சிட்டி ஆஃப் காலேஜ் பிர்மிங்காம், சிட்டி யுனிவர்சிட்டி லண்டன், பிபிபி யுனிவர்சிட்டி, ஆஸ்டன் யுனிவர்சிட்டி, யுனிவர்சிட்டி ஆஃப் ஈஸ்ட் லண்டன், யுனிவர்சிட்டி ஆஃப் கிரீன்விச் (லண்டன்), லிவர்பூல் ஹோப் யுனிவர்சிட்டி, லண்டன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸ் அண்ட் மேனேஜ்மெண்ட், நியூகேஸில் யுனிவர்சிட்டி, யுனிவர்சிட்டி ஆஃப் ரீடிங், குயின் மேரி யுனிவர்சிட்டி ஆஃப் லண்டன் உள்ளிட்ட 63 பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் கல்வி நிறுவனங்களில் கற்பிக்கப்படும் படிப்புகள் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
ஆண்டுதோறும் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களில் எஜுக்கேஷன் யு.கே. கண்காட்சியை நடத்தி வருகிறோம். இங்கிலாந்து சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்து தருகிறோம். மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாதது என்ன? என்பது பற்றியெல்லாம் விளக்குகிறோம். பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் படிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கும் நாங்கள் உதவுகிறோம். IELTS தேர்வுக்குத் தயாராகும் முறை பற்றியும் விளக்கமளிக்கிறோம்" என்கிறார் பிரிட்டீஷ் கவுன்சிலின் சர்வதேசக் கல்விச் சந்தைக்கான சீனியர் புராஜக்ட் மேனேஜர் (தென் இந்தியா) சோனு.
மாஸ் கம்யூனிக்கேஷன், கம்ப்யூட்டர் எடட் டிசைன், ஃபிலிம் அண்ட் டி.வி. புரடக்ஷன், மீடியா, டிசைன், டாகுமெண்டரி புரடக்ஷன், ஃபைன் ஆர்ட்ஸ், அக்ரிகல்ச்சுரல் மேனேஜ்மெண்ட், கிரிமினஸ் ஜஸ்டிஸ், அனிமல் கேர், சயின்ஸ் அண்ட் மேனேஜ்மெண்ட், மோட்டார் ஸ்போர்ட்ஸ் என்ஜினீயரிங், பர்பார்மிங் ஆர்ட்ஸ், டிராவல் அண்ட் டூரிஸம், ஸ்போர்ட்ஸ் ஜர்னலிசம், இன்டர்நேஷனல் மேனேஜ்மெண்ட், கிராபிக் டிசைன், அப்ளைடு பெட்ரோலியம் ஜியோசயின்ஸ், கண்ட்ரோல் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன், கன்ஸ்ட்ரக்ஷன் எக்கனாமிக்ஸ் அண்ட் மேனேஜ்மெண்ட், டிரக் டிக்கவரி அண்ட் டெவலப்மெண்ட் உள்ளிட்ட ஏராளமான பிரிவுகளில் ஆயிரக்கணக்கான படிப்புகள் பிரிட்டனிலுள்ள பல்கலைக்கழகங்களில் கற்றுத் தரப்படுகின்றன.
பிரிட்டனிலுள்ள எந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கலாம் என்பதை முடிவு செய்வது, சம்பந்தப்பட்ட மாணவனின் வாழ்க்கையில் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தப்போகும் முடிவு. எனவே ஒரு பல்கலைக்கழகத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முதலில் எஜுக்கேஷன் யு.கே. இணையதளத்துக்குச் சென்று பார்வையிடுவது நல்லது. ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும் உள்ள படிப்புகள், வசதிகள் பற்றியெல்லாம் இதிலிருந்து அறிந்துகொள்ள முடியும். யு.கே. விசா மற்றும் இமிக்ரேஷன் இணையதளத்திற்குச் சென்று நீங்கள் படிக்கத் தேர்ந்தெடுத்துள்ள கல்வி நிறுவனம் பதிவு செய்யப்பட்டதுதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். உங்கள் ஊருக்கு அருகிலுள்ள பிரிட்டீஷ் கவுன்சில் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு இங்கிலாந்தில் படிப்பதற்கான வாய்ப்புகள், செலவுகள் போன்ற விவரங்களை அறிந்து கொள்ளுங்கள். பிறகு ஒரு தெளிவான முடிவை எடுக்கலாம்.
பிரிட்டனில் எம்.பி.ஏ. படிக்க விரும்பும் மாணவர்கள், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இளநிலைப் பட்டப் படிப்பையோ அல்லது முதுநிலை பட்டப் படிப்பையோ படித்து முடித்த மாணவர்கள் நேரடியாக எம்.பி.ஏ. படிப்பில் சேர முடியாது. பிரபலமான மேனேஜ்மெண்ட் கல்லூரிகளில் படிக்க விரும்பினால் அதற்கேற்றபடி கல்விக் கட்டணமும் அதிகமாக இருக்கும். படித்துக் கொண்டிருக்கும்போதே பகுதி நேர வேலை பார்த்து சம்பாதிக்கவும் முடியும்" என்கிறார் இங்கிலாந்திலுள்ள ஐ.இ.எஸ். அகாதெமியின் இயக்குநர் (தென் இந்தியா) டாக்டர். ஜார்ஜ் ஜோசப். கண்காட்சிக்கு வந்திருந்த அன்னபூரணி என்ற மாணவி, சென்னையில் எம்.எஸ்.டபிள்யூ முடித்தவர். இங்கிலாந்தில் பிஎச்.டி. படிப்புக்கான வாய்ப்புகள் பற்றி அறிந்துகொள்ள வந்திருந்தார்.
இங்கிலாந்தில் முழு நேர பிஎச்.டி. படிப்புக்கு மூன்று ஆண்டுகள் ஆகும். பகுதி நேரப் படிப்புக்கு 5 ஆண்டுகள் ஆகும். பிஎச்.டி. படிப்புக்காக இங்கிலாந்து செல்பவர்கள், அங்கு பகுதி நேர வேலை பார்ப்பது சாத்தியமில்லை என்பதை தெரிந்துகொண்டேன்" என்கிறார் அன்னபூரணி.
பிரிட்டனில் இளநிலை பட்டப் படிப்பு படிக்க விரும்புபவர்கள், மேல்நிலைக் கல்வியில் 60 சதவீதத்துக்குக் குறையாத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். ஒரு சில பல்கலைக்கழகங்கள் 75 முதல் 90 சதவீதம் வரை மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று நிர்ணயித்துள்ளது. அத்துடன் ஆங்கில மொழி அறிவை சோதித்தறியும் TOEFL அல்லது IELTS தேர்வில் சிறப்பிடம் பெற்றிருக்கவேண்டும். IELTS தேர்வுக்குத் தயாராவதற்கு பிரிட்டீஷ் கவுன்சிலே பயிற்சியளிக்கிறது.
பிரிட்டனில் இளநிலை பட்டப் படிப்பு படிக்க ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரையும், முதுநிலை பட்டப் படிப்பு படிக்க ஆண்டுக்கு ரூ.13 லட்சம் வரையும் செலவு பிடிக்கும். தேர்ந்தெடுக்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் படிப்புக்கேற்ப இந்தக் கட்டணம் மாறுபடும். படித்துக் கொண்டிருக்கும்போதே பகுதி நேரமாக வாரத்துக்கு 20 மணி நேரம் வேலை பார்க்கலாம். அதில் கிடைக்கும் ஊதியத்தைக்கொண்டு தங்களது செலவுகளைச் சமாளித்துக்கொள்ள முடியும். மாணவர்களின் படிப்பு மற்றும் திறமைக்கேற்ப பல்வேறு ஸ்காலர்ஷிப்களும் கிடைக்கும். இங்கிலாந்துக்குப் படிக்கப் போகும் மாணவர்கள், அதுபற்றி ஓராண்டுக்கு முன்பே திட்டமிடுவது நல்லது. எதைப் படிக்கப் போகிறோம், எங்கு படிக்கப் போகிறோம் என்பதை முன்கூட்டியே முடிவு செய்துகொள்ள வேண்டும்.
பிரிட்டனில் செப்டம்பர் மாதத்திலிருந்துதான் கல்வியாண்டு தொடங்குகிறது. அதனால் அதற்கு முன்பே, ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலேயே படிக்கும் கல்லூரி, தேர்ந்தெடுக்கும் படிப்பு பற்றித் தீர்மானித்து விடவேண்டும். அத்துடன் ‘ஸ்டேட்மெண்ட் ஆஃப் பர்ப்பஸ்’ எனப்படும் சுயவிளக்கக் கடிதத்தையும் தயார்செய்ய வேண்டும். பிரிட்டன் சென்று படிக்க விரும்பும் காரணத்தையும், குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தை, படிப்பைத் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன என்பதையும் அதில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். தவிர, நீங்கள் தற்போது படித்துக் கொண்டிருக்கும் பள்ளி அல்லது கல்லூரி முதல்வரிடமிருந்து ஒரு பரிந்துரைக் கடிதத்தையும் பெற்று அனுப்ப வேண்டும்" என்று டிப்ஸ் தருகிறார் லண்டனிலுள்ள கிங்ஸ்டன் பல்கலைக் கழகத்தின் சர்வதேச அதிகாரி எலினர் லூகர்.
மேலும் விவரங்களுக்கு: www.britishcouncil.in / www.educationuk.org/india / www.ielts.org / www.vfs-uk-in.com
மேற்படிப்புக்கு லாத்வியா நாட்டுக்குப் போகலாமா?
எஸ். சந்திர மௌலி
லாத்வியா - ஐரோப்பாவில் பால்டிக் கடலையொட்டி, ருஷ்யா, லிதுவேனியா, எஸ்தானியா ஆகிய நாடுகளால் சூழப்பட்ட சின்ன தேசம் லாத்வியா. சுமார் 65 ஆயிரம் ச.கி.மீ. பரப்பளவும், 23 லட்சம் மக்கள் தொகையும் கொண்ட இந்நாட்டின் தலைநகரம் ரிகா. லாத்வியா நாட்டில் உள்ள ஏழு பல்கலைக்கழகங்கள் ஒன்று சேர்ந்து சென்னையில், ‘லாத்வியா கல்வி மையம்’ ஒன்றைத் துவக்கியுள்ளன. லாத்வியா நாட்டில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு உதவுவதற்காக அந்நாட்டு அரசாங்கத்தின் ஆதரவோடு இந்தியாவில் துவக்கப்பட்டிருக்கும் முதல் மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மையத்தின் துவக்க விழாவுக்காக லாத்விய பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் குழு ஒன்று சென்னைக்கு வந்திருந்தது. அவர்களோடு ஒரு உரையாடல்:
லாத்வியா நாட்டைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?
பல நூற்றாண்டுப் பாரம்பரியமும், கலாசாரமும் கொண்ட லாத்வியா, ருஷ்யாவிடமிருந்து 1991-ல் சுதந்திரம் பெற்றது. மக்கள் தொகையில் 60% லாத்வியர்கள், 30% ருஷ்யர்கள். பாராளுமன்ற மக்களாட்சி நடக்கிறது. நாட்டின் பெரும்பகுதி காடுகளைக் கொண்டது. ஏராளமான வன விலங்குகளும் உண்டு. நாடெங்குமாக 12 ஆயிரம் சிறு ஆறுகளும், 3,000 ஏரிகளும் உள்ளன. ஐரோப்பிய நாடுகளின் கட்டுமான மற்றும் காகிதத் தொழிலுக்குத் தேவையான மரம் இங்கிருந்துதான் ஏற்றுமதியாகிறது. நீண்ட, கடுமையான குளிர்காலமும், வெதுவெதுப்பான கோடையும் கொண்ட நாடு. மிகப் பழைமையான ஐரோப்பிய மொழிகளில் லாத்விய மொழியும் ஒன்று (ஒரு விஷயம்: லாத்விய மொழிக்கும், நம் நாட்டின் சம்ஸ்கிருதத்துக்கும் தொடர்பு உண்டு என்கிறது ஓர் இன்டர்னெட் தகவல்). ஐஸ் ஹாக்கி நாட்டின் மிகப் பிரபலமான விளையாட்டு. கால்பந்தும், கூடைப்பந்தும் மற்ற முக்கிய விளையாட்டுகள்.
உங்கள் ஊர் பல்கலைக்கழகங்களின் ஸ்பெஷாலிட்டி என்ன?
‘எங்கள் பல்கலைக்கழகங்கள் மிகச் சிறந்த கல்வியாளர்களையும், தொழில்நுட்ப வல்லுநர்களையும் கொண்டவை. நவீன வசதிகள், பெரிய நூல் நிலையங்கள், ஆராய்ச்சி வசதிகள், தரமான கல்வி ஆகியவை எங்கள் பலம். பட்டப் படிப்புக்கு லாத்வியா வந்தால், பட்ட மேற்படிப்பையும், அதன் பின் ஆராய்சிப் படிப்பையும் தொடர முடியும். மேலும், மற்ற ஐரோப்பிய பல்கலைக்கழகங்களோடு ஒப்பிடும் போது, லாத்வியாவில்தான் மிக அதிகபட்சமாக ஆங்கிலத்தில் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. மாணவர்கள், படிக்கும்போது வாரத்துக்கு 20 மணிநேரம் வரை பகுதி நேரமாக ஏதாவது பணி செய்து சம்பாதிக்கலாம். இதற்காக பிரத்யேகமாக ஒர்க் பர்மிட் பெற வேண்டிய அவசியமில்லை. மற்ற சில ஐரோப்பிய நாடுகளில் மாணவர்கள், படிப்பை முடித்தவுடன், அங்கேயே வேலை தேட வேண்டுமானாலும் கூட, மாணவர் விசா முடிந்து, தங்கள் ஊருக்குக் கட்டாயமாகச் சென்று, மீண்டும் விசா நீட்டிப்புக்கு விண்ணப்பித்து, அதன் பிறகு ஐரோப்பா திரும்பி, வேலை தேட வேண்டும். லாத்வியாவில் அதற்கு அவசியமில்லை. படிப்பை முடித்தவுடன், அங்கேயே தங்கி வேலை தேடிக்கொள்ளலாம். தற்போது ஐம்பதுக்கும் அதிகமான உலக நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் எங்கள் நாட்டுப் பல்கலைக்கழகங்களில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். பன்னாட்டு மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்களும் உள்ளன.
இப்போது இந்திய மாணவர்கள் யாராவது லாத்வியாவில் படிக்கிறார்களா?
சுமார் 200 இந்திய மாணவர்கள் இப்போது லாத்வியாவில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். மற்ற எந்த ஐரோப்பிய நாடுகளையும் விட, லாத்வியா சென்று படிப்பதால் செலவு கொஞ்சம் குறைவாகவே இருக்கும்.’
தொடர்புக்கு:
Study in Latvia, 18, II Floor, Lokesh Towers, Kodambakkam High Road, Chennai - 600034
CSIR –UGC நடத்தும் விரிவுரையாளர் தகுதித் தேர்வு
கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகவும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்காக ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்பும் பெற விரும்பும் அறிவியல் பாட மாணவர்கள் சிஎஸ்ஐஆர்-யுஜிசி நடத்தும் நெட் தேர்வை எழுத வேண்டும். தற்போது, பொறியியல் பட்ட மாணவர்களும் எம்பிபிஎஸ் பட்ட மாணவர்களும் இத்தேர்வை எழுத அனுமதிக்கப்படுகிறார்கள்.
கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகவும் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் பெற்று ஆராச்சிப் படிப்புகளை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களும் அறிவியல் மற்றும் தொழில் ஆராச்சிக் கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) நடத்தும் சிஎஸ்ஐஆர்-யுஜிசி விரிவுரையாளர் தகுதித் தேர்வை (நெட்) எழுத வேண்டும். இந்தத் தேர்வு ஆண்டுக்கு இரு முறை, அதாவது ஜூன், டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது. வருகிற ஜூன் 22-ஆம் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இந்தத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு நடைபெறும் தேதியில் மாறுதல் இருக்கவும் வாய்ப்பு உண்டு. தேர்வுக் கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கெமிக்கல் சயின்சஸ்,
- லைஃப் சயின்சஸ்
- எர்த், அட்மாஸ்பெரிக், ஓசன் அண்ட் பிளானிட்டரி சயின்சஸ்
- பிசிக்கல் சயின்ஸ்,
- மேத்மேட்டிக்கல் சயின்சஸ்,
- என்ஜினீயரிங் சயின்சஸ்
ஆகிய ஆறு பாடப் பிரிவுகளில் மூன்று மணி நேரம் இத்தேர்வு நடைபெறும். இந்தப் பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் 200 மதிப்பெண்கள். கேள்வித்தாள் ஏ,பி,சி என்ற மூன்று பகுதிகளைக் கொண்டதாக இருக்கும். பகுதி-ஏ பிரிவு அனைத்துப் பாடங்களுக்கும் பொதுவானது. லாஜிக்கல் ரீசனிங், கிராபிக்கல் அனாலிசிஸ், அனலிட்டிக்கல் அண்ட் நியூமரிக்கல் எபிலிட்டி, குவான்டிடேட்டிவ் கம்பேரிசன், சீரியஸ் பார்மேசன், பசில்ஸ் போன்ற பிரிவுகளில் திறனறி வினாக்கள் இருக்கும்.
என்ஜினீயரிங் மாணவர்களுக்கான பகுதி-பி பிரிவில் கணிதம், என்ஜினீயரிங் ஆப்டிட்யூட் ஆகியவை குறித்த வினாக்களும் பகுதி - சி பிரிவில் சம்பந்தப்பட்ட பாடங்களிலிருந்து அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகளும் கேட்கப்படும்.
மற்ற பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பகுதி - பி பிரிவில் சம்பந்தப்பட்ட பாடங்களில் அப்ஜெக்ட்டிவ் முறையில் வினாக்கள் கேட்கப்படும். பகுதி - சி பிரிவில் அறிவியல் கோட்பாடுகள் குறித்து மாணவர்களின் அறிவை சோதனை செய்யும் வகையில் வினாக்கள் இருக்கும். இத்தேர்வுக்கான பாடத்திட்டங்கள் இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சென்னை உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் இத்தேர்வை எழுதலாம்.
இந்தத் தேர்வை யார் எழுதலாம்?
பிஎஸ் நான்கு ஆண்டு பட்டப் படிப்பு, பிஇ, பிடெக், பிபார்ம், எம்பிபிஎஸ், ஒருங்கிணைந்த பிஎஸ்-எம்எஸ் அல்லது எம்எஸ்சி படிப்புகள் அல்லது அதற்கு நிகரான படிப்புகளில் பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி மாணவர்கள் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் இந்தப் படிப்புகளில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எம்எஸ்சி படிக்கச் சேர்ந்துள்ள மாணவர்களும் இத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். பிஎஸ்சி ஆனர்ஸ் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றவர்களும் இத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். ஒருங்கிணைந்த எம்எஸ்.-பிஎச்டி படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களும் இத்தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். அதேசமயம், பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி மாணவர்கள் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
அறிவியல், பொறியியல் அல்லது வேறு பாடங்களில் இளநிலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் பிஎச்டி அல்லது ஒருங்கிணைந்த பிஎச்டி படிப்பில் பதிவு செய்த பிறகுதான் ஃபெல்லோஷிப் பெறுவதற்கு தகுதி பெறுகிறார்கள். விரிவுரையாளருக்கான நெட் தேர்வில் தகுதி பெற்றவர்கள், பல்கலைக்கழக மானியக் குழுவின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். ஜேஆர்எஃப்-நெட் தேர்வு எழுத விரும்புபவர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதி நிலவரப்படி, 28 வயதுக்கு மேல் ஆகி இருக்கக் கூடாது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் விலக்கு அளிக்கப்படும். விரிவுரையாளர் பணிக்கான நெட் தேர்வு எழுதுவதற்கு வயது வரம்பு எதுவும் இல்லை.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்தத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், இந்தியன் வங்கிக் கிளைகளில் விண்ணப்பக் கட்டணங்களைச் செலுத்தலாம். பொதுப்பிரிவு மாணவர்களுக்கு கட்டணம் ரூ.400. ஓபிசி பிரிவினருக்கு கட்டணம் ரூ.200. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பார்வையற்றோருக்கு கட்டணம் ரூ.100. ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் மாணவர்கள், ஆன்லைன் மூலம் செலானை டவுன்லோடு செய்து விண்ணப்பக் கட்டணத்தை இந்தியன் வங்கியில் செலுத்த வேண்டும்.
வங்கிகளில் மார்ச் 3-ஆம் தேதிக்குள் கட்டணத்தைச் செலுத்திவிட வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 4. ஆன்லைன் மூலம் அனுப்பிய விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, வங்கி செலான் மற்றும் உரிய உரிய இணைப்புகளுடன் ‘Sr. Controller of Examination, Examination Unit, HRDG, CSIR Complex, Library Avenue, Pusa, New Delhi - 110012’ என்ற முகவரிக்கு மார்ச் 8-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். நீண்ட தூர பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களின் விண்ணப்பங்கள் மார்ச் 14-ஆம் தேதி வரை ஏற்றுக் கொள்ளப்படும். விண்ணப்பிக்கும் முறை, தகுதி உள்ளிட்ட விரிவான தகவல்களை இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
விவரங்களுக்கு: www.csirhrdg.res.in
9 February 2014
Science Academies sponsored Two-day Lecture Workshop on “Recent Advances in Materials Chemistry” at Anna University, BIT Campus, Tiruchirappalli
Date of the Workshop : 7th and 8th March,
Click here for Workshop Brochure
Click here for Workshop Registration Form
Coordinator:
Dr. K. Jothivenkatachalam
Department of Chemistry
Bharathidasan Institute of Technology
Anna University, Tiruchirappalli 620 024
Ph: +91 9443215423
E.mail: ramc2014bit@gmail.com
Click here for Workshop Brochure
Click here for Workshop Registration Form
Coordinator:
Dr. K. Jothivenkatachalam
Department of Chemistry
Bharathidasan Institute of Technology
Anna University, Tiruchirappalli 620 024
Ph: +91 9443215423
E.mail: ramc2014bit@gmail.com
தமிழ் வழியில் இன்ஜினீயரிங் படிப்பு: இறுதியாண்டில் முதல் பேட்ச் மாணவர்கள்
தமிழகத்தில் 2010-ம் ஆண்டு முதன்முதலாக தமிழ்வழி இன்ஜினீயரிங் பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அண்ணா பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் பாடத்திட்டம், தமிழகத்தில் உள்ள அனைத்து அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பாடத்திட்டத்தில் சிவில் மற்றும் மெக்கானிக்கல் துறைகள் இயங்கி வருகின்றன.
தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அப்போதைய திமுக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனால் மாணவர்களும் தமிழ்வழிக் கல்வியை விரும்பி எடுத்தனர்.
தற்போது தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமிழ்வழியில் இன்ஜினீயரிங் படித்து வருகின்றனர். 2010-ம் ஆண்டு சேர்ந்த முதல் பேட்ச் மாணவர்கள், இப்போது இறுதியாண்டை எட்டியுள்ளனர். தமிழ்வழியில் படித்த தங்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து இறுதியாண்டு மாணவர் ஒருவர் கூறியதாவது:
எங்கள் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே வளாக நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆங்கில வழியில் படித்த மாணவர்களுக்குத்தான் அதில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. தமிழ்வழி மாணவர்களுக்கு சொற்பமான அளவிலேயே வளாக நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. எங்களுக்கு உரிய வேலைவாய்ப்பை வழங்க அரசும் பல்கலைக்கழமும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக நேர்முகத்தேர்வு அலுவலர் தியாகராஜன் கூறியதாவது:
தமிழ்வழி மாணவர்களுக்கு வேலை கிடைக்காததுபோல் ஒரு மாயை உள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு தமிழ்வழி மாணவியே அதிகமான சம்பளத்தில் வேலைக்கு தேர்வாகியிருக்கிறார். தமிழ்வழியில் மெக்கானிக்கல் படிக்கும் எஸ்.சண்முகப்பிரியா என்ற அந்த மாணவியை மஹேந்திரா & மஹேந்திரா நிறுவனம், ஆண்டுக்கு ரூ.5.6 லட்சம் சம்பளத்துக்கு தேர்வு செய்துள்ளது.
மேலும் பல நிறுவனங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறோம், அவையும் வளாக நேர்முகத்தேர்வுக்கு வருவதாக கூறியுள்ளன. ஆங்கில வழி மாணவர்களைப் போலவே டான்செட், கேட் போன்ற நுழைவுத்தேர்வுகளை எழுதி தமிழ் வழி மாணவர்களும் மேற்படிப்பை படிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
7 February 2014
Managers, Sr Engineers, DGM, Sr Managers – 25 Posts from SJVN Limited
SJVN Limited Recruitment 2014 – Apply Online for Manager, Engineer & Other Posts:
Satluj Jal Vidyut Nigam Limited (SJVNL) invited applicaitons for the recruitment of 25 Manager, Engineer & Other Posts. Eligible candidates can apply Online from 11-02-2014 at 10:00 AM to 25-02-2014 at 6:00 PM. Other details like age limit, educational qualification, selection, application fee and how to apply are given below……
SJVN Limited Vacancy Details:
Total No of Posts: 25
Name of the Post:
Civil:
1. DGM/ E7: 01 Post
2. Sr. Manager/ E6: 02 Posts
3. Manager/ E5: 03 Posts
4. Deputy Manager/ E4: 03 Posts
5. Sr. Engineer/ E3: 03 Posts
1. DGM/ E7: 01 Post
2. Sr. Manager/ E6: 02 Posts
3. Manager/ E5: 03 Posts
4. Deputy Manager/ E4: 03 Posts
5. Sr. Engineer/ E3: 03 Posts
Electrical:
1. DGM/ E7: 01 Post
2. Sr. Manager/ E6: 01 Posts
3. Manager/ E5: 02 Posts
4. Deputy Manager/ E4: 01 Posts
5. Sr. Engineer/ E3: 04 Posts
1. DGM/ E7: 01 Post
2. Sr. Manager/ E6: 01 Posts
3. Manager/ E5: 02 Posts
4. Deputy Manager/ E4: 01 Posts
5. Sr. Engineer/ E3: 04 Posts
Mechanical:
1. Manager/ E5: 01 Post
2. Sr. Engineer/ E3: 03 Post
1. Manager/ E5: 01 Post
2. Sr. Engineer/ E3: 03 Post
Age Limit: Candidates age should be 50 years for DGM and 45 years for Sr. Manager & Manager and 40 years for Dy. Manager and 35 years for Sr. Engineer. Age Relaxation is applicable for SC/ ST candidates.
Educational Qualification: Candidates should have Full time regular Degree in Civil Engineering for Civil and Full time regular Degree in Electrical/ Electrical & Electronics Engineering for Electrical and Full time regular Degree in Mechanical Engineering for Mechanical with relevant experiences.
Selection Procedure: Candidates are selected based on interview.
Application Fee: Candidates have to take Demand Draft (DD) for Rs.300/- for general/ obc in favour of SJVN Limited payable at Shimla.
How to Apply: Eligible candidates can apply Online through the website www.sjvn.nic.in with scanned copy of latest passport size photograph as well as photograph of signatures in digital format (.jpg or .jpeg file only, less than 500 KB size) for uploading from 11-02-2014 at 10:00 AM to 25-02-2014 at 6:00 PM and submit hard copy of application alongwith DD, certificates in support of Educational/ Professional Qualification, Age, Category, Experience, Valid e-mail ID and mobile number, which should remain valid for atleast one year and send to Advt. No.71/2014, O/o DGM (Recruitment), SJVN Limited, Room No: 206, Himfed Building, Near BCS, New Shimla, HP- 171009 on or before 07-03-2014 by 6:00 PM.
Important Dates:
Starting Date of Online Application: 11-02-2014 at 10:00 AM.
Last Date for Submission of Online Application: 25-02-2014 at 6:00 PM.
Last Date for Submission of Hard Copy of Application: 07-03-2014 by 6:00 PM.
Starting Date of Online Application: 11-02-2014 at 10:00 AM.
Last Date for Submission of Online Application: 25-02-2014 at 6:00 PM.
Last Date for Submission of Hard Copy of Application: 07-03-2014 by 6:00 PM.
Click here for Recruitment Advt
6 February 2014
தெற்கு ரயில்வேயில் 1,666 பேருக்கு வேலை
தெற்கு ரயில்வேயில் 1,666 பணியிடங்களுக்கு தகுதியுடையவர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அசிஸ்டண்ட் லோகோ பைலட் (ஏ.எல்.பி.) மற்றும் டெக்னீஷியன் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
சேர விரும்புபவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர், எலெக்ட்ரீஷியன், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக், மில்ரைட், ரேடியோ அண்ட் டி.வி. மெக்கானிக், எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், மோட்டார் வாகன மெக்கானிக், வயர்மேன், டீசல் மெக்கானிக், டர்னர், பெயிண்டர், கார்பெண்டர் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோ மற்றும் என்ஜினீயரிங் பட்டம் பெற்றவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்பதாரர்கள் 18 வயதிலிருந்து 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.40 (பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர்களுக்கு). தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், முன்னாள் படைவீரர்கள், கணவனை இழந்த பெண்கள் மற்றும் ஊனமுற்றோர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
அசிஸ்டண்ட் லோகோ பைலட் (ஏ.எல்.பி.) பணியில் பொதுப் பிரிவினருக்கு 157 காலியிடங்களும், தாழ்த்தப்பட்டோருக்கு 45 காலியிடங்களும், பழங்குடியினருக்கு 18 காலியிடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 63 காலியிடங்களும் உள்ளன. இந்தப் பணிக்கு மொத்தம் 283 காலியிடங்கள் உள்ளன. டெக்னீஷியன் பணியில் பொதுப் பிரிவினருக்கு 782 காலியிடங்களும், தாழ்த்தப்பட்டோருக்கு 347 காலியிடங்களும், பழங்குடியினருக்கு 275 காலியிடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 262 காலியிடங்களும் என மொத்தம் 1,383 காலியிடங்கள் உள்ளன.
எழுத்துத் தேர்வு எப்படி இருக்கும்?: எழுத்துத் தேர்வு மூலம் இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். அதற்கான எழுத்துத் தேர்வில் ஜெனரல் அவேர்னஸ், மேத்மேட்டிக்ஸ், ஜெனரல் இன்டலிஜென்ஸ், ரீசனிங், ஜெனரல் சயின்ஸ், டெக்னிக்கல் எபிலிட்டி என ஆறு பிரிவுகளில் இருந்து 100 முதல் 120 கேள்விகள் வரை கேட்கப்படும். அதற்கு 90 நிமிடங்கள் உள்ளன. ஒவ்வொரு தவறான பதிலுக்கும் நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.
விண்ணப்பிப்பது எப்படி?:
விண்ணப்பப் படிவத்தை இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளவும். விண்ணப்பப் படிவத்தில் நீலம் அல்லது கறுப்பு பால் பாயிண்ட் பேனாவால் அடித்தல், திருத்தல் இல்லாமல் எழுத வேண்டும். தற்போது எடுக்கப்பட்டிருக்கும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை, ‘The Assistant Secretary, Railway Recruitment Board, Chennai' payable at Chennai என்ற முகவரிக்கு டி.டி. எடுத்து அனுப்ப வேண்டும். அல்லது விண்ணப்பக் கட்டணத்தை ’The Assistant Secretary, Railway Recruitment Board, Chennai' payable at 'GPO, Chennai’ என்கிற முகவரிக்கு இந்தியன் போஸ்டல் ஆர்டரும் அனுப்பலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் கட்டணம் செலுத்திய டி.டி. அல்லது போஸ்டல் ஆர்டர் ரசீதையும், பத்தாம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. சான்றிதழ் நகலையும், சாதிச் சான்றிதழ் நகலையும் சேர்த்து அனுப்பி வைக்கவேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: The Assistant Secretary, Railway Recruitment Board, No.5, Dr.P.V. Cherian Crescant Road, Behind Ethiraj College, Egmore, Chennai - 600008.
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 17.02.2014
தேர்வு நாள்: 15.06.2014
விவரங்களுக்கு: http://rrcb.gov.in/
தில்லி தெற்காசிய பல்கலைக்கழகத்தில் உதவித் தொகையுடன் முதுநிலை படிப்புகள்
மோ.கணேசன்
சார்க் நாடுகள் அமைப்பின் முயற்சியால் தில்லியில் தொடங்கப்பட்டுள்ள தெற்காசிய பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பில் சேரவிரும்பும் மாணவர்கள் அதற்கான நுழைவுத்தேர்வை எழுத விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
இந்தியா, இலங்கை, பூட்டான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், வங்கதேசம், மாலத்தீவு ஆகிய நாடுகளை அடக்கிய சார்க் நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் முதுநிலை படிப்புகளைப் படிக்க உதவும் வகையில் சார்க் நாடுகள் அமைப்பின் முயற்சியால் கடந்த 2010-ஆம் ஆண்டு, தில்லியில் தெற்காசியப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. சர்வதேசத் தரத்தில் ஆசிரியர்கள், மிகச்சிறந்த நூலக வசதி, நவீன அறிவியல் ஆய்வுக்கூடங்கள், 24 மணி நேர இலவச இண்டர்நெட் இணைப்பு வசதி, மிகக்குறைந்த செலவில் ஹாஸ்டல் வசதி போன்ற நவீன வசதிகள் கொண்டது இப்பல்கலைக்கழகம். பொருளாதாரரீதியில் பின்தங்கியிருந்தாலும் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு உதவித் தொகை கிடைக்கும். ஆவை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு ஏற்ற பல்கலைக்கழகம் இது.
இந்தப் பல்கலைக்கழகத்தில் அப்ளைடு மேத்மேட்டிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-டெக்னாலஜி ஆகிய பாடப்பிரிவுகளில் எம்எஸ்சி படிப்பும் இண்டர்நேஷனல் ரிலேஷன்ஸ், டெவலப்மெண்ட் எக்கனாமிக்ஸ், சோஷியாலஜி ஆகிய பாடப்பிரிவுகளில் எம்ஏ படிப்பையும் படிக்கலாம். அத்துடன், எல்எல்எம் எனப்படும் மாஸ்டர் ஆப் லா படிப்பும் இங்கு உள்ளது. இதுதவிர, எம்பில், பிஎச்டி ஆய்வுப் படிப்புகளையும் படிக்க வாய்ப்புகள் உண்டு. முதுகலைப் படிப்புகளில் உள்ள ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 30 மாணவர்கள் சேர்க்கப்படுவர். 30 மாணவர்களில் 15 இடங்கள் இந்திய மாணவர்களுக்கும், மீதமுள்ள 15 இடங்கள் பிற சார்க் நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
எம்ஏ மற்றும் எல்எல்எம் படிப்புகளில் சேர விரும்புவோர் தங்களது இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடனும், எம்எஸ்சி படிப்பில் சேர விரும்புவோர் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பட்டப் படிப்புகளை ரெகுலர் முறையில் படித்து முடித்திருக்க வேண்டும். ஒவ்வொரு முதுநிலை படிப்பிலும் சேருவதற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்ற விவரங்கள் இணையதளத்தில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக தனி நுழைவுத் தேர்வு சார்க் நாடுகளின் முக்கிய நகரங்களில் நடத்தப்படுகிறது. இந்தியாவில் சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு, குவாஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர். கொல்கத்தா, லக்னோ, மும்பை, சண்டிகார், பாட்னா மற்றும் தில்லி ஆகிய நகரங்களில் இந்த நுழைவுத் தேர்வு நடைபெறும். எந்தப் பாடப்பிரிவில் மாணவர்கள் சேர விரும்புகிறார்களோ அந்தப் பாடப் பிரிவிலிருந்தும், ஜெனரல் அவேர்னஸ், நாட்டு நடப்புகளிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும். மூன்று மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வில் அப்ஜெக்டிவ் முறையிலும், விரிவாக பதில் அளிக்கும் முறையிலும் கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வுக்கு மொத்த மதிப்பெண்கள் 100.
படிப்புக் கட்டணம்: இந்தியா உள்ளிட்ட சார்க் நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கான ஓராண்டுக்கான படிப்புக் கட்டணம் 880 அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் தோராயமாக 54 ஆயிரம் ரூபாய் ஆகும். விடுதி வசதி உண்டு. விடுதியில் தங்குவதற்கு மாத வாடகை ரூ. 500. உணவுக்கட்டணம் தனி.
கல்வி உதவித் தொகை: தெற்காசியப் பல்கலைக்கழகத்தில் படிக்கச் சேரும் மாணவர்களுக்கு பல்வேறு உதவித் தொகைகள் கிடைக்கும் சாத்தியங்கள் உள்ளன. நுழைவுத்தேர்வில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு பிரசிடெண்ட் ஸ்காலர்ஷிப் கிடைக்கும். இந்த ஸ்காலர்ஷிப்பில் முழு படிப்புக் கட்டணமும், விடுதிக் கட்டணமும் இலவசம். அத்துடன், அந்த மாணவர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரம் உதவித்தொகையும் வழங்கப்படும். ஒவ்வொரு நாட்டிலும் நுழைவுத்தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு இந்த பிரசிடெண்ட் ஸ்காலர்ஷிப் கிடைக்கும்.
பொருளாதார அளவில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு மாதம் 3 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் வரையில் உதவித்தொகை வழங்கப்படும். ஸ்காலர்ஷிப் அனைத்தும் ஓராண்டுக்கு வழங்கப்படும். அந்த ஓராண்டில் மாணவரின் படிப்புத்திறனைப் பொருத்து உதவித் தொகை அடுத்த ஆண்டிற்கு நீட்டிக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ. 600. டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு என ஆன்லைன் மூலமாகவும், டிமாண்ட் டிராப்ட் மூலமாகவும் கட்டணத்தைச் செலுத்தலாம்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.03.2014
நுழைவுத்தேர்வு நடைபெறும் தேதி: 06.04.2014.
விவரங்களுக்கு: http://sau.ac.in
‘‘தமிழக மாணவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை’’
கள்ளக்குறிச்சிதான் எனக்கு சொந்த ஊர். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பிஇ படித்து முடித்துவிட்டு வேலைக்குச் சென்று கொண்டிருந்தேன். அப்போது தெற்காசிய பல்கலைக்கழகத்தின் விளம்பரத்தினைப் பார்த்து எம்எஸ்சி, மேத்மேட்டிக்ஸ் படிப்புக்கு விண்ணப்பித்தேன்.
‘‘தமிழக மாணவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை’’
கள்ளக்குறிச்சிதான் எனக்கு சொந்த ஊர். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பிஇ படித்து முடித்துவிட்டு வேலைக்குச் சென்று கொண்டிருந்தேன். அப்போது தெற்காசிய பல்கலைக்கழகத்தின் விளம்பரத்தினைப் பார்த்து எம்எஸ்சி, மேத்மேட்டிக்ஸ் படிப்புக்கு விண்ணப்பித்தேன்.
நுழைவுத்தேர்வு எளிமையாகத்தான் இருந்தது. அப்படி ஒன்றும் கடினமானதாக இல்லை. இந்த நுழைவுத்தேர்வுக்குத் தயாராக வேண்டுமெனில் இந்த இணையதளத்தில் பாடத்திட்டங்களும், நடைபெற்று முடிந்த தேர்வுகளின் வினாத்தாள்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதனை டவுன்லோடு செய்து பயிற்சி செய்தாலே எளிதில் தேர்ச்சி பெற்றுவிடலாம்.
உலகத்தரம் வாய்ந்த கல்வி முறை, சிறந்த நூலகம், பல்வேறு நாட்டு மாணவர்களுடன் இணைந்து படிக்கும் வசதி, குறைந்த கட்டணத்தில் ஹாஸ்டல் வசதி இப்படி எல்லா வகையிலும் தெற்காசியப் பல்கலைக்கழகம் ஒரு படி மேலே இருக்கிறது. இங்கு படிப்பது குறித்து தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கே போதிய விழிப்புணர்வு இல்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.
என் அப்பா பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணி புரிகிறார். ஆண்டு வருமானம் 3 லட்சம் அவருக்கு. இந்த வருமானத்தின் அடிப்படையில் மாதம் 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும் இந்தப் பல்கலைக்கழகத்தின் மூலம் எனக்கு கிடைக்கிறது. இதனால் பொருளாதார நெருக்கடியின்றி இங்கு படித்துவருகிறேன். சென்ற ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து மூன்று பேர் இங்கு படிக்க வந்தோம். அதில் இரண்டு பேர் இங்கிருந்தபடியே சிவில் சர்வீஸ் தேர்வை எழுதி, தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்து விட்டனர். ஆய்வுப் படிப்புகளில் ஈடுபடவேண்டும் என்று விரும்பும் மாணவர்களுக்கு இந்தப் பல்கலைக்கழகம் சரியானதொரு தேர்வு"
- தீபக் பாண்டியன்,
2-ஆம் ஆண்டு எம்எஸ்சி,
தெற்காசியப் பல்கலைக்கழகம்
ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் தேர்வு பட்டதாரி மாணவர்களுக்கு மத்திய அரசு வேலை!
பொன்.தனசேகரன்
மத்திய அரசுப் பணிகளில் சேர விரும்பும் பட்டதாரி மாணவர்கள் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் நடத்தும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வை எழுத வேண்டும்.
மத்திய அரசுப் பணிகளில் சேர விரும்புபவர்களுக்காக ‘ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்’ ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வை (Combined Graduate) நடத்துகிறது. சென்ட்ரல் செக்ரட்டேரியேட் சர்வீஸ், சென்ட்ரல் விஜிலன்ஸ் கமிஷன், இன்டலிஜென்ஸ் பீரோ, ரயில்வே அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகம், ஏஎஃப் தலைமையகம், மற்ற அமைச்சகங்கள், துறைகள், மற்றம் அரசு அமைப்புகளில் உதவியாளர் பணிகளில் சேர விரும்புபவர்கள் இத்தேர்வை எழுத வேண்டும். அத்துடன், வருமானவரித் துறை இன்ஸ்பெக்டர், சுங்க வரித்துறை இன்ஸ்பெக்டர், தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் (எக்ஸாமினர்), அசிஸ்டெண்ட் என்போர்ஸ்மெண்ட் அதிகாரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் (சிபிஐ), இன்ஸ்பெக்டர் ஆஃப் போஸ்ட்ஸ் (தபால் துறை) டிவிஷனல் அக்கவுன்டண்ட் (சிஏஜி அலுவலகங்களில்), ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்வெஸ்டிகேட்டர் கிரேடு-2, போதை மருந்து தடுப்பு இன்ஸ்பெக்டர் (சென்ட்ரல் பீரோ ஆஃப் நார்காட்டிக்ஸ்) ஆகிய பணிகளில் சேர விரும்புகிறவர்களும் இத்தேர்வை எழுத வேண்டும். ஆடிட்டர், அக்கவுன்டண்ட், ஜூனியர் அக்கவுன்டண்ட், கிளார்க் (அப்பர் டிவிஷன் கிளார்க்), வரி உதவியாளர், கம்பைலர் போன்ற பணிகளில் சேர விரும்புபவர்களும் இத்தேர்வை எழுத வேண்டும்.
இந்தப் பணிகளில் சேர பட்டப் படிப்புப் படித்திருக்க வேண்டும். கம்பைலர் பணியில் சேர விரும்புபவர்கள், பொருளாதாரம், புள்ளியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளை பட்டப் படிப்பில் கட்டாயப் பாடமாகவோ அல்லது விருப்பப் பாடமாகவோ எடுத்துப் படித்திருக்க வேண்டும். ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்வெஸ்டிகேட்டர் கிரேடு-2 பணியில் சேர விரும்புபவர்கள் பட்டப் படிப்பில் புள்ளியியல் பாடத்தை முக்கியப் பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும் அல்லது பட்டப் படிப்பில் கணிதத்தை முக்கியப் பாடமாக எடுத்து, புள்ளியியலையும் ஒரு பாடமாக எடுத்துப் படித்தவர்களும் இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் அல்லது பட்டப் படிப்பில் பொருளாதாரத்தை முக்கியப் பாடமாக எடுத்து, அத்துடன் புள்ளியியலையும் ஒரு பாடமாக எடுத்துப் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் அல்லது பட்டப் படிப்பில் வணிகவியல் பாடத்துடன், புள்ளியியலை ஒரு பாடமாக எடுத்துப் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். தொலைநிலைக் கல்வி அல்லது திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களில் பெறும் பட்டங்கள், இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்விக் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டியது அவசியம். உதவியாளர் பணியில் சேர விரும்புபவர்களுக்கு கம்ப்யூட்டர் திறன் இருக்க வேண்டியது அவசியம்.
வருமான வரித்துறை இன்ஸ்பெக்டர், மத்திய சுங்க வரித் துறை இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் (தடுப்பு அதிகாரி), இன்ஸ்பெக்டர் (எக்ஸாமினர்), இன்ஸ்பெக்டர் ஆஃப் போஸ்ட்ஸ், அசிஸ்டெண்ட் என்ஃபோர்ஸ்மெண்ட் ஆபீசர், இன்ஸ்பெக்டர் (சிபிஎன்) கம்பைலர், டிவிஷனல் அக்கவுன்டண்ட், ஆடிட்டர்ஸ், அப்பர் டிவிஷன் கிளார்க், டாக்ஸ் அசிஸ்டெண்ட்ஸ், ஜுனியர் அக்கவுண்டன்ட் அண்ட் அக்கவுண்டன்ட், சப் இன்ஸ்பெக்டர் (சிபிஎன்) ஆகிய பணிகளில் சேர விரும்புபவர்கள் 18 வயதிலிருந்து 27 வயதுக்குள் இருக்க வேண்டும் அதாவது 2-01-1987க்கு முன்னதாகவோ அல்லது 1-01-1996க்குப் பிறகு பிறந்தவர்களாகவோ இருக்கக் கூடாது.
ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்வெஸ்டிக்கேட்டர் கிரேடு-2 பணியில் சேர விரும்புவர்களுக்கு 26 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது. அதாவது, 2-01-1988க்கு முன்னதாகப் பிறந்திருக்கக்கூடாது. சிபிஐ பிரிவில் அசிஸ்டெண்ட், சப் இன்ஸ்பெக்டர் பணியில் சேர விரும்புபவர்கள், 20 வயதிலிருந்து 27 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது, 2-01-1987க்கு முன்னதாகவோ அல்லது 1-01-1994க்குப் பிறகு பிறந்தவர்களாகவோ இருக்கக் கூடாது.
தாழ்த்தப்பட்டோருக்கு 5 ஆண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். ஓபிசி பிரிவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகளும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் 15 ஆண்டுகளும் விலக்கு அளிக்கப்படும். இதேபோல மற்ற சில பிரிவினருக்கும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படுகிறது. இந்தப் பணிகளில் சேருவதற்காக தகுதி மற்றும் விதிமுறைகள் இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த எழுத்துத் தேர்வு இரண்டு நிலைகளைக் கொண்டது. முதலில் அப்ஜெக்ட்டிவ் முறையில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். அதையடுத்து குறிப்பிட்ட பணிகளுக்காக தேவையைக் கருத்தில் கொண்டு கம்ப்யூட்டர் புரபிசியன்சி டெஸ்ட், இன்டர்வியூ, ஸ்கில் டெஸ்ட் போன்ற தேர்வுகள் நடத்தப்படும். கோவை, சென்னை, மதுரை, புதுச்சேரி, திருநெல்வேலி, திருச்சி உள்பட நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் இந்தத் தேர்வை எழுதலாம். இந்த TIER-1 எழுத்துத் தேர்வு ஏப்ரல் 27, மே 4 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தேவைப்பட்டால் அதைத் தொடர்ந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இத்தேர்வு நடைபெறும். TIER-2 எழுத்துத் தேர்வு (மூன்றாம் தாள்) ஆகஸ்ட் 30-ஆம் தேதியும், முதல் மற்றும் இரண்டாம் தாள்கள் ஆகஸ்ட் 31-ஆம் தேதியும் நடைபெறும்.
ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்வெஸ்டிகேட்டர் தவிர, நேர்காணலுடன் கூடிய பணிகளில் சேருவதற்கு டயர்-1 தேர்வில் ஜெனரல் இன்டலிஜன்ஸ், ரீசனிங், பொது விழிப்புணர்வு, குவான்டிட்டேட்டிவ் ஆப்டிட்யூட், இங்கிலீஷ் காம்ப்ரிஹென்சன் ஆகியவற்றில் வினாக்கள் கேட்கப்படும். 2 மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வுக்கு மொத்த மதிப்பெண்கள் 200. டயர்-2 தேர்வில் குவான்டிட்டேட்டிவ் எபிலிட்டீஸ் பிரிவில் 100 கேள்விகள் கேட்கப்படும். இந்த இரண்டு மணி நேரத் தேர்வுக்கு மொத்தம் 200 மதிப்பெண்கள் வழங்கப்படும். இங்கிலீஷ் லாங்வேஜ் அண்ட் காம்ப்ரிஹென்சன் பிரிவுக்கு 200 மதிப்பெண்கள். இதற்கும் விடையளிக்க 2 மணி நேரம் வழங்கப்படும். இதையடுத்து நேர்காணலுக்கு 100 மதிப்பெண்கள். உதவியாளர் (சிஎஸ்எஸ்) பணியில் சேருவதற்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு மட்டும் கம்ப்யூட்டர் புரபிசியன்சி டெஸ்ட் நடத்தப்படும்.
நேர்காணல் இல்லாத கம்பைலர் அல்லாத வேறு பணிகளுக்கு டயர்-1, டயர்-2 தேர்வுகள் இதேபோல இருக்கும். வரி உதவியாளர் பணிக்காக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு டேட்டா என்ட்ரி ஸ்கில் டெஸ்ட் நடத்தப்படும்.
ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்வெஸ்டிகேட்டர் (கிரேடு-2) பணியில் சேர விரும்புபவர்களுக்கு டயர்-1 தேர்வு ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளது போல இருக்கும். டயர்-2 தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் தாளுக்கு 400 மதிப்பெண்களும் மூன்றாவது தாளுக்கு (புள்ளியியல்) 200 மதிப்பெண்களும் வழங்கப்படும். அத்துடன் நேர்முகத் தேர்வுக்கு 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதேபோல கம்பைலர் பணிக்கு டயர்-1, டயர்-2 தேர்வு இருக்கும். ஆனால் நேர்காணல் இருக்காது. இத்தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்து ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்வு எழுத விரும்புபவர்களுக்கான கட்டணம் ரூ.100. பெண் விண்ணப்பதாரர்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் போன்றவர்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும். விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் அனுப்பலாம் அல்லது விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம். எந்தப் பணிக்கு விண்ணப்பிக்கிறோம் என்பதைக் குறிப்பிட வேண்டும். விண்ணப்பத்தை ஒரு முறைக்கு மேல் அனுப்பக்கூடாது. விண்ணப்பிக்கும் முன்னதாக தகுதிகள், தேர்வு குறித்த அனைத்து விவரங்களையும் தெரிந்துகொண்டு விண்ணப்பிப்பது நல்லது. பணி நியமனத்தில் மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறை கடைப்பிடிக்கப்படும். இடஒதுக்கீட்டுக்கான பயன்களைப் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.
இந்தப் போட்டித் தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும். அசாம், மேகாலயா, அருணாசலப் பிரதேசம், மிசோராம், மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம், காஷ்மீர், இமாசலப் பிரதேசம், அந்தமான் நிகோபார் தீவுகள் போன்ற தொலை தூரப் பகுதிகளைச் சேர்ந்த மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் பிப்ரவரி 21-ஆம் தேதி வரை ஏற்றுக் கொள்ளப்படும். முதலாவது பிரிவின் கீழ் உள்ள பணிகளுக்கு ஆன்லைன் மூலம் பிப்ரவரி 12-ஆம் தேதி வரையும் இரண்டாவது பிரிவுப் பணிகளுக்கு பிப்ரவரி 14-ஆம் தேதி வரையிலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர்களுக்கு வழங்கப்படும் பதிவு எண்ணை மறக்காமல் குறித்து வைத்துக் கொள்ளவும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்கள், பிரிண்ட் அவுட்டுகளை தனியே அனுப்ப வேண்டியதில்லை. இத்தேர்வு குறித்த விரிவான தகவல்கள், ‘எம்ப்ளாய்மெண்ட் நியூஸ்’ இதழிலும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் போட்டித் தேர்வை எழுத பெண்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். மத்திய அரசுப் பணிகளில் சேர விரும்பும் பட்டதாரி மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
விவரங்களுக்கு: http://ssconline.nic.in
இலவச எம்டெக் படிப்பு: படித்ததும் உடனடி வேலை
ஐஐடி, என்ஐடி கல்வி நிறுவனங்களில் எம்டெக் கன்ஸ்ட்ரக்ஷன் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மெண்ட் படிக்க என்ஜினீயரிங் பட்டதாரி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கி, படித்து முடித்த தகுதியான மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4 லட்சம் சம்பளத்தில் வேலையும் வழங்குகிறது எல் அண்ட் டி நிறுவனம்.
இந்தியாவில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் எல் அண்ட் டி என்று அழைக்கப்படும் லார்சன் அண்ட் டியூப்ரோ. சிறந்த திட்ட மேலாளர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், என்ஜினீயரிங் பட்டதாரி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்கீழ், சென்னை மற்றும் தில்லி ஐஐடிக்கள், திருச்சி, சூரத்கல் ஆகிய இடங்களில் உள்ள என்ஐடிகளில் எம்டெக் கன்ஸ்ட்ரக்ஷன் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மெண்ட் படிப்பை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி ஸ்பான்சர் செய்கிறது இந்த நிறுவனம்.
இந்த இரண்டு ஆண்டு படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பட்டப் படிப்பில் இந்த ஆண்டு தேர்ச்சி பெறுபவர்களாக இருக்க வேண்டும். அத்துடன் 10-ஆம் வகுப்பிலும் 12-ஆம் வகுப்பிலும் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வேண்டும். சிஜிபிஏ என்றால் 10-க்கு 6.50 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பாடப் பிரிவுகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் 60 சதவீத மதிப்பெண்கள் (சிஜிபிஏ என்றால் 10-க்கு 6.75 மதிப்பெண்கள்) எடுக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு 1-07-2014 நிலவரப்படி, 23 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது. உயரம் குறைந்தது 160 சென்டி மீட்டரும் குறைந்த பட்சமாக 50 கிலோ எடை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். பார்வைத் திறனும் கணக்கில் கொள்ளப்படும். அதாவது, மாணவர்கள் கண்ணாடி அணிந்திருந்தால் பார்வைத் திறன் குறைபாடு + அல்லது - 5 வரை இருக்கலாம்.
எல் அண்ட் டி கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து ஐஐடிக்கள் மற்றும் என்ஐடிக்கள் எழுத்துத் தேர்வையும் தொடர்ந்து நேர்முகத் தேர்வையும் நடத்தும். அதன் அடிப்படையில் மாணவர்கள் இந்த 24 மாத கால முதுநிலை பட்டப் படிப்பிற்கு தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு இந்தப் படிப்புக்கான படிப்புக் கட்டணத்தை எல் அண்ட் டி நிறுவனமே செலுத்தி விடும். அத்துடன் மாணவர்களுக்கு, மாதம் ரூ.9 ஆயிரம் வீதம் உதவித் தொகை வழங்கப்படும். இந்தப் படிப்பை வெற்றிகரமாக முடித்த மாணவர்கள் இந்த நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் சம்பளத்தில் வேலையில் சேர அனுமதிக்கப்படுவர். இந்தத் திட்டத்தின்கீழ் படிக்கச் சேரும் மாணவர்கள், வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டால், குறைந்தது ஐந்து ஆண்டுகள் இந்த நிறுவனத்தில் பணி செய்ய உத்தரவாதம் அளித்து ரூ.3 லட்சத்துக்கான உறுதிப் பத்திரம் எழுதித் தர வேண்டும்.
உதவித் தொகையுடன் கூடிய, இந்த எம்டெக் படிப்பில் சேர விரும்பும் என்ஜினீயரிங் பட்டப் படிப்பில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள், இந்தப் படிப்பில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விவரங்களுக்கு: www.lntecc.com
Labels:
Civil Engineering,
Electrical,
M.E / M.Tech,
Mechanical,
Scholarships
Subscribe to:
Posts (Atom)