24 November 2014

பின்தங்கிய மாணவர்களுக்கு எல்.ஐ.சி வழங்கும் உதவித்தொகை

இந்திய ஆயுள் காப்பீட்டுத் துறையில் 50 ஆண்டுகளைக் கடந்த மிகவும் வெற்றிகரமாக இயங்கி வரும் லைப் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா எல்.ஐ.சி பற்றி நாம் அறிவோம்.
இந்த நிறுவனத்தின் ஒவ்வொரு கோட்டத்திலிருக்கும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய 20 மாணவர்களுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குகிறது.
யாருக்கு கிடைக்கும்: இந்த ஆண்டில் பிளஸ் 2 அல்லது பத்தாம் வகுப்புத் தேர்டிவ எழுதி குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேறி, உயர் படிப்புக்காக தற்போது விண்ணப்பித்துள்ளவர்களுக்கும் கிடைக்கும்.
இவர்களின் பெற்றோர் அல்லது காப்பாளரின் ஆண்டு வருமானம் ரூ.60 ஆயிரத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
எல்.ஐ.சி வழங்கும் மாணவர்களுக்கான உதவித்தையைப் பெற ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எல்.ஐ.சி-யின் இணையதளத்திற்கு சென்று ஸ்காலர்ஷிப் பெதாடர்புடைய கேள்விகளுக்கு முழுமையாகப் பதில் அளிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்களில் தகுதி உடையவர்களுக்கு மட்டும் தொடர்புடைய கோட்டத்திலிருந்து தகவல் கிடைக்கும். அப்போது கோட்ட நிர்வாகம் கேட்கும் உரிய ஆவணங்களுடன் செல்ல வேண்டியிருக்கும்.
முழுமையான தகவல்களுக்கு எல்.ஐ.சி,யின் இணையதளத்தைப் பார்க்கவும்.
இணையதள முகவரி: www.licindia.in

ஆசிய மாணவர்களுக்கு நியூசிலாந்து பல்கலை வழங்கும் உதவித்தொகை

நியூசிலாந்தில் உள்ள வைகாட்டோ பல்கலைக்கழகம் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க உள்ளது.
வைகாட்டோ பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்தியா, இந்தோனேசியா, சீனா, ஹாங்காங், ஜப்பான், மலேசியா, பிலிபைன்ஸ், சிங்கப்பூர், தென் கொரியா, தைவான், தைலாந்து மற்றும் வியாட்னம் ஆகிய 12 ஆசிய நாடுகளில் உள்ள மாணவர்களை தேர்வு செய்து, இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு நியூசிலாந்து $10,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.
கூடுதல் விவரங்கள் அறிய www.waikato.ac.nz என்ற இணையதளத்தை அணுகலாம்.

பயோ டெக்னாலஜி துறையில் உதவித்தொகையுடன் 6 மாத பயிற்சி

அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பயோஇன்பர்மேட்டிக் துறையில் பயோ இன்பர்மேட்டிக்ஸ் மாணவர்களுக்கு 2014-15ம் ஆண்டில் உதவித்தொகையுடன் 6 மாத கால செய்முறை பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியின் பெயர்: DBT (Bioinformatics Industrial Training Programme
தகுதி:
பி.டெக்/பி.இ/எம்.எஸ்சி/எம்.டெக் ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
ரு.250 இதனை Biotech Consortium India Limited என்ற பெயரில் மாற்றத்தக்க வகையில் டிடியாக எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.ncil.nic.in/biitp2014-15/index.asp என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
டிசிரி, டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ படிப்புகளுக்கான சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல்களின் சுய அட்டெஸ்ட் செய்த நகல்களை Mr.Manok Gupta, Dy Maneger, Biotech Consortium India Limited, 5th Floor, Anuvrat Bhawan, 210, DDeen Dayal Upadhyaya Marg, New Delhi - 110 002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க டிசம்பர் 9 கடைசி நாளாகும்.
டிசம்பர் 12 ஆவனங்கள் தபாலில் சென்றடைய வேண்டிய கடைசி தேதியாகும்.
தேர்வு செய்யப்பட்டவர்கள் விபரம் டிசம்பர் 23ல் இணையதளத்தில் வெளியிடப்படும்.
நேர்முகத்தேர்வு ஜனவரி 1-16ம் தேதி வரை நடைபெறும்.