Pages
- About Us
- Library Services
- Library Working Hours
- Rules and Regulations
- Collections
- E-Resources
- Open Access Dictionaries/Encyclopedia
- Open Access E-Books
- Open Course Wears
- Open Access IR
- Free IEEE Journals
- Open Access E-Journals
- Open E-Theses
- News Papers
- Ongoing Research Projects
- Centre For Research
- Conferences & Workshops
- Discussion Forums
- BIT Media Library
- NPTEL Video Lectures
- BIT-Library Youtube Channel
- E-Learning Lectures
- UPSC jobs
- TNPSC Jobs
- Educational Loans & Scholarships
- Engineering Calculator
- Photogallery
- GATE preparation Apps & Papers
- E-Question Bank
- Staff Profile
- Contact Address
25 March 2014
ஐஏஎஸ் இலவசப் பயிற்சி!
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய (யு.பி.எஸ்.சி.) சிவில் சர்வீஸ் தேர்வின் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்ற மாணவர்களுக்கு சென்னையில் உள்ள தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையம் இலவசப் பயிற்சி அளிக்கிறது. மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் பயிற்சி அளிப்பார்கள். நேர்முகத் தேர்வுப் பயிற்சியில் சேர விரும்புபவர்கள், தங்களது மூன்று புகைப்படங்களுடன், யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகலுடன் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
விவரங்களுக்கு: 044-24621909, 24621475
விவரங்களுக்கு: 044-24621909, 24621475
தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் 292 ஜூனியர் என்ஜினீயர் பணி
தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் ஜூனியர் என்ஜினீயர் பணிக்கு விண்ணபிக்கலாம். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், சிவில் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 25 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும். ஓ.பி.சி பிரிவினருக்கு 77 காலியிடங்களும், தாழ்த்தப்பட்டோருக்கு 42 காலியிடங்களும், பழங்குடியினருக்கு 20 காலியிடங்களும், மற்றவர்களுக்கு 153 காலியிடங்களும் உள்ளன.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.04.2014
விவரங்களுக்கு: www.delhimetrorail.com
Labels:
Civil Engineering,
Electrical,
Electronics,
Jobs,
Jobs Diploma
பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 30 இணை என்ஜினீயர் பணி
பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணை என்ஜினீயர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் - கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் - டெலிகம்யூனிகேஷன் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.03.2014
விவரங்களுக்கு: www.bel-india.com
சிட்கோவில் 84 உதவி என்ஜினீயர் பணி
மத்திய அரசின் கீழ் மகாராஷ்டிர மாநிலத்தில் இயங்கி வரும் சிட்கோ நிறுவனத்தில் உதவி என்ஜினீயர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். சிவில் துறையில் பி.இ. அல்லது ஏ.எம்.ஐ.இ பட்டம் பெற்றிருக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.04.2014
விவரங்களுக்கு: www.cidco.maharashtra.gov.in
என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு கடற்படையில் வேலை
இந்திய கடற்படையில் எக்ஸ்கியூட்டிவ், சப்மெரைன், டெக்னிக் பிரிவுகளில் குறுகிய கால பணியில் டெக்னிக் பிரிவுகளில் குறுகிய கால பணிகளில் சேர விரும்பும் என்ஜினீயரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். திருமணமாகாத ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 191/2 வயதுக்குக் குறையாமலும் 25 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். அதாவது 2-1-1990-க்கு முன்னதாகவோ அல்லது 1.1.1995 தேதிக்குப் பிறகோ பிறந்திருக்கக் கூடாது.
டெக்னிக்கல் மற்றும் சப்மெரைன் பிரிவுக்கு மெக்கானிக்கல், மெரைன், ஆட்டோமொபைல், மெக்கட்ரானிக்ஸ், புரொடக்ஷன், மெட்டலர்ஜி, ஏரோனாட்டிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன், இன்ஸ்ட்ரூமென்டேஷன், பவர் என்ஜினீயரிங், பவர் எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் பி.இ. அல்லது பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும். எக்சிக்யூட்டிவ் பிரிவுக்கு ஏதேனும் ஒரு துறையில் பி.இ. அல்லது பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும். என்.சி.சி.யில் ‘சி’ சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
உடற்தகுதி: குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரத்துடன் தகுந்த எடை இருக்க வேண்டும்.
தேர்வு முறை: இரண்டு பிரிவுகளில் தேர்வுகள் நடக்கும். முதல் பிரிவில் Intelligence test, picture perception, குழு விவாதத் தேர்வும், இரண்டாம் பிரிவில் psychological testing, group testing மற்றும் நேர்காணலும் நடத்தப்படும். இரண்டு பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை?
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழையும், 25kb-க்குள் இருக்கும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தையும் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.
இணையதளத்தில் ‘Apply online’ பிரிவை கிளிக் செய்யவும். பின்னர் ’Office Entry’ பகுதிக்குச் சென்று ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
பூர்த்தி செய்த பின்னர், சரியாக உள்ளதா என சரிபார்த்து பிரிண்ட் அவுட் எடுக்கவும். பிரிண்ட் எடுத்த விண்ணப்பப் படிவத்துடன் கையெழுத்துள்ள பாஸ்போர்ட் சைஸ் போட்டோவையும், பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களையும் சேர்த்து Post Box No. 04, Chankya Puri PO, New Delhi - 110 021என்ற முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்ப உறையின் மேல் ONLINE APPLICATION NO._________APPLICATION FOR SSC X(GS)/HYDRO CADRE/TECHNICAL BRANCH (E/L/SM) - DEC 2014 COURSE Qualification______ Percentage _____%. NCC "C' Yes/No என்று எழுத வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.03.2014
விவரங்களுக்கு: www.nausena-bharti.nic.in
வேலைவாய்ப்பை அள்ளித் தரும் காலணி வடிவமைப்பு படிப்புகள்!
காலணி வடிவமைப்பு படிப்புகளுக்குப் புகழ் பெற்ற ஃபுட்வேர் டிசைன் அண்ட் டெவலப்மெண்ட் இன்ஸ்டிட்யூட்டில் பி.டெஸ். இளநிலை பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் பிளஸ் டூ படித்த மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
மத்தியவணிகத்துறைஅமைச்சகத்தின்கீழ்செயல்படும்ஃபுட்வேர் டிசைன்அண்ட்டெவலப்மெண்ட்இன்ஸ்டிட்யூட்(எஃப்டிடிஐ), நொய்டா, சென்னை, ரேபரேலி, கொல்கத்தா, ரோடக், சிந்த்வாரா, ஜோத்பூர், குணாஆகியஇடங்களில்உள்ளன. இங்குபடித்தவர்கள்அமெரிக்கா, பிரிட்டன், இங்கிலாந்து, சிங்கப்பூர், சீனா, வளைகுடாநாடுகள், ஹாங்காங்போன்றபல்வேறுநாடுகளில்பணியாற்றுகிறார்கள். டாடா, பேட்டா, அடிடாஸ், நைக், வுட்லாண்ட், லேண்ட்மார்க், பூமா, கால்வின்கெய்ன், ஜாரா, கார்ட்லன்லண்டன், வில்ஸ்லைஃப்ஸ்டைல்போன்றபிரபலநிறுவனங்கள்இங்குபடிக்கும்மாணவர்களைவேலைக்குத்தேர்வுசெய்கின்றன.
சென்னைவளாகம், இருங்காட்டுக்கோட்டையில்சிப்கார்ஃபுட்வேர்பார்க்அருகேஉள்ளது. இங்கு, ஃபுட்வேர்டிசைன்அண்ட்புரடக்ஷன்மேனேஜ்மெண்ட், ஃபேஷன்டிசைன், ஃபேஷன்மெர்ச்சன்டைசிங்அண்ட்ரீடெய்ஸ்மேனேஜ்மெண்ட்ஆகியபிரிவுகளில்இளநிலைபட்டப்படிப்பானபி.டெஸ். படிப்புஉள்ளது. ஃபுட்வேர்டிசைன்அண்ட்புரடக்ஷன்மேனேஜ்மெண்ட்மற்றும்ஃபேஷன்மெர்ச்சன்டைசிங்அண்ட்ரீடெய்ல்மேனேஜ்மெண்ட்ஆகியபிரிவுகளில்எம்.பி.ஏ. படிப்புஉள்ளது.
ஃபுட்வேர் டிசைன்அண்ட்டெவலப்மெண்ட்இன்ஸ்டிட்யூட்டில், ஃபுட்வேர்டிசைன்அண்ட்புரடக்ஷன்மேனேஜ்மெண்ட், லெதர்குட்ஸ்அண்ட்அக்சசரிஸ்டிசைன், ஃபேஷன்டிசைன்ஆகியபாடப்பிரிவுகளில்பி.டெஸ். என்கிறநான்குஆண்டுபடிப்பில்சேரவும், ரீடெய்ஸ்மேனேஜ்மெண்ட், பிசினஸ்மேனேஜ்மெண்ட்பாடப்பிரிவுகளில்ஐந்துஆண்டுஒருங்கிணைந்தபிபிஏ-எம்பிஏபடிப்பில்சேரவும்பிளஸ்டூபடித்தமாணவர்கள்விண்ணப்பிக்கலாம். பிளஸ்டூதேர்வுஎழுதிவிட்டு, முடிவுக்காகக்காத்திருப்பவர்களும்விண்ணப்பிக்கலாம்.
இந்தப்படிப்பில்சேரவிரும்பும்மாணவர்கள்அகிலஇந்தியஅளவில்நடத்தப்படும்நுழைவுத்தேர்வைஎழுதவேண்டும். சென்னைஉள்ளிட்டமுக்கியநகரங்களில்இந்தநுழைவுத்தேர்வைஎழுதலாம். அப்ஜெக்ட்டிவ்முறையில்நடத்தப்படும்இந்தநுழைவுத்தேர்வில், கணிதம், ஆங்கிலத்தில்தலா45 கேள்விகளும், அறிவியலில்பொதுஅறிவு, ஜெனரல்அவேர்னஸ்ஆகியபிரிவுகளில்தலா30 கேள்விகளும்எனமொத்தம்150 கேள்விகள்கேட்கப்படும். இரண்டரைமணிநேரம்நடைபெறும்இத்தேர்வுக்குமொத்தமதிப்பெண்கள்150. தவறானவிடைகளுக்குநெகட்டிவ்மதிப்பெண்கள்வழங்கப்படமாட்டாது. எழுத்துத்தேர்வில்தகுதிபெறுவோருக்குநேர்முகத்தேர்வு, குழுவிவாதம், கிரியேட்டிவ்எபிலிட்டிடெஸ்ட்ஆகியவைநடத்தப்படும்.
ஃபேஷன்மெர்ச்சன்டைசிங்அண்ட்ரீடெய்ல்மேனேஜ்மெண்ட், ஃபுட்வேர்டிசைன்அண்ட்புரடக்ஷன்மேனேஜ்மெண்ட்பாடப்பிரிவுகளில்எம்.பி.ஏ. படிப்புகளில்சேர, ஏதேனும்ஒருதுறையில்இளநிலைபட்டம்பெற்றவர்கள்விண்ணப்பிக்கலாம். கிரியேட்டிவ்டிசைன்அண்ட்கேட்-காம்பாடப்பிரிவில்இரண்டுஆண்டுஎம்.டெஸ். படிப்பில்சேர, பட்டதாரிமாணவர்கள்விண்ணப்பிக்கலாம்.
முதுநிலைபட்டப்படிப்புகளில்சேரவிரும்புவோருக்கானநுழைவுத்தேர்வில்குவான்டிடேட்டிவ்ஆப்டிட்யூட்அண்ட்ரீசனிங், ஆங்கிலம்ஆகியபிரிவுகளிலிருந்துதலா45 கேள்விகளும், ஜெனரல்அவேர்னஸ், பிஸினஸ்ஆப்டிட்யூட்ஆகியபிரிவுகளிலிருந்துதலா30 கேள்விகளும்கேட்கப்படும். மொத்தமதிப்பெண்கள்150. தேர்வுநேரம்இரண்டரைமணிநேரம். எழுத்துத்தேர்வில்தகுதிபெறுபவர்களுக்குநேர்முகத்தேர்வு, குழுவிவாதம், கிரியேட்டிவ்எபிலிட்டிடெஸ்ட்ஆகியவைநடத்தப்படும்.
இளநிலைபட்டப்படிப்பைப்பொருத்தவரை, ஸ்பான்சர்செய்யப்படும்மாணவர்களும்,BITSATஉள்ளிட்டகுறிப்பிட்டசிலநுழைவுத்தேர்வுகளைஎழுதியிருப்பவர்களும்நுழைவுத்தேர்வுஎழுதத்தேவையில்லை. முதுநிலைபடிப்பைப்பொருத்தவரை, ஸ்பான்சர்செய்யப்படும்மாணவர்களும், CAT, MAT, ZAT உள்ளிட்டதேர்வுகளில்சிறப்பிடம்பெற்றமாணவர்கள், நுழைவுத்தேர்வை எழுதத்தேவையில்லை. ஆனால், நேர்முகத்தேர்வு, கிரியேட்டிவ்எபிலிட்டிடெஸ்ட்போன்றவைஉண்டு.
இளநிலைமற்றும்முதுநிலைபட்டப்படிப்புகளில்15 சதவீதஇடங்கள்ஸ்பான்சர்செய்யப்படும்விண்ணப்பதாரர்களுக்கானவை. விண்ணப்பத்துடன்வழங்கப்படும்விளக்கக்குறிப்பில்தேர்வுக்கானமாதிரிவினாத்தாள்வழங்கப்படும்.
எஃப்டிடிஐயின்இணையதளத்தில்மாதிரித்தேர்வுகளைஎழுதிப்பார்க்கவும்வசதிகள்செய்யப்பட்டுள்ளன.
விண்ணப்பிப்பதுஎப்படி?: ஃபுட்வேர் டிசைன்அண்ட்டெவலப்மெண்ட்இன்ஸ்டிட்யூட்களில்நேரடியாகரூ.500 செலுத்திவிண்ணப்பங்களைப்பெறலாம்அல்லதுபுதுதில்லியில்மாற்றத்தக்கவகையில்ரூ.500- க்கானடிமாண்ட்டிராப்ட்டைஎடுத்துஅனுப்பிவிண்ணப்பங்களைப்பெறலாம்.
விண்ணப்பிக்ககடைசிதேதி: 19.05.2014
நுழைவுத்தேர்வுநடைபெறும்தேதி: 13, 14 மற்றும்15.06.2014
விவரங்களுக்கு: www.fddi.com
NATA பி.ஆர்க். படிப்பில் சேர நுழைவுத் தேர்வு
கலை ரசனை, டிராயிங் திறமை, தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றில் திறமையுள்ள மாணவர்களுக்கு ஏற்ற படிப்பு பி.ஆர்க். இந்தப் படிப்பில் சேர விரும்பும் பிளஸ் டூ படித்த மாணவர்கள் கவுன்சில் ஆஃப் ஆர்க்கிடெக்ச்சர் அமைப்பு அகில இந்திய அளவில் நடத்தும் நேட்டா (NATA) திறனறித் தேர்வை எழுத வேண்டும். மற்ற பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு இல்லாத தமிழகத்திலும் பி.ஆர்க். படிப்பில் சேர வேண்டுமானால் இந்த நுழைவுத் தேர்வை எழுதியாக வேண்டும்.
கட்டடங்களையும் இதரக் கட்டுமானங்களையும் வடிவமைப்பது பற்றிய படிப்புதான் ஆர்க்கிடெக்ச்சர். கட்டடவியல் வடிவமைப்பாளர் கட்டுமான இடத்தில் என்னென்ன புதுமைகளைப் புகுத்த முடியும், அதற்கு எவ்வளவு செலவாகும், எவ்வளவு இடம் தேவைப்படும், எவ்வளவு பொருள்கள் தேவைப்படும், கட்டடத்துக்கு எவ்வளவு காற்றோட்டமும் வெளிச்சமும் கிடைக்கும் என்று பல்வேறு விஷயங்களையும் உள்வாங்கி கட்டுமானத்தைத் திட்டமிட வேண்டியது ஆர்க்கிடெக்ச்சர் படித்தவர்களின் பொறுப்பு. புராதனக் கட்டடங்களைக் பாதுகாப்பது, கிரீன் பில்டிங் என்கிற சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கட்டட வடிவமைப்பு, நகரங்களைத் திட்டமிடுதல், திறந்தவெளி வடிவமைப்பு போன்ற பல்வேறு அம்சங்களும் ஆர்க்கிடெக்ச்சர் படித்தவர்களின் பணிகளில் அடங்கும். கட்டுமானத்துறையின் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக ஆர்க்கிடெக்ச்சர் எனப்படும் கட்டடக்கலைத் துறையில் பி.ஆர்க். படித்த மாணவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன.
கலை ரசனை, டிராயிங் திறமை, தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றில் திறமையுள்ள மாணவர்களுக்கு ஏற்ற படிப்பு பி.ஆர்க். இந்தப் படிப்புக் காலம் ஐந்து ஆண்டுகள். இப்படிப்பை முடித்தவர்கள் கவுன்சில் ஆஃப் ஆர்க்கிடெக்ச்சர் அமைப்பில் பதிவு செய்த பிறகு ஆர்க்கிடெக்டுகளாகப் பணிபுரியலாம். கட்டட நிர்மாண நிறுவனங்களிலும் பொதுப்பணித்துறை போன்ற அரசுத் துறை நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும். சில ஆண்டு அனுபவத்திற்குப் பிறகு இத்துறையின் நெளிவு சுழிவுகளைத் தெரிந்துகொண்டு சொந்தமாக கட்டடக்கலை நிறுவனங்களைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தும் மாணவர்களும் இருக்கிறார்கள்.
இப்படிப்பில் சேருவதற்கு கவுன்சில் ஆஃப் ஆர்க்கிடெக்ச்சர் அமைப்பு அகில இந்திய அளவில் நடத்தும் நேட்டா திறனறித் தேர்வை (NATA எழுதி இருக்க வேண்டும். இதற்கு தமிழக மாணவர்களும் விலக்கு அல்ல. தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேருவதற்கு நுழைவுத் தேர்வு எதுவும் நடத்தப்படுவதில்லை. ஆனால், பி.ஆர்க். படிப்பில் சேருவதற்கு நேட்டா நுழைவுத் தேர்வு எழுதியிருக்க வேண்டும்.
இந்தத் தேர்வை யார் எழுதலாம்?
பி.ஆர்க். படிக்க விரும்பும் மாணவர்கள் இத்தேர்வை எழுத வேண்டும். பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற யாரும் இத்தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள். பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் பிளஸ் டூ தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கும் மாணவர்களும் இந்த நுழைவுத் தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். பிளஸ் டூ தேர்வில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்து, அந்தப் பாடத்தில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம். லேட்டரல் என்ட்ரி மூலம் பிஆர்க் படிக்க முடியாது என்பதையும் மாணவர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.
தேர்வு எப்படி இருக்கும்?
இத்தேர்வு இரண்டு பிரிவுகளைக் கொண்டது. டிராயிங் டெஸ்ட், இந்தத் தேர்வு காகிதத்தில் விடையளிக்கும் வகையில் இருக்கும். கொடுக்கப்பட்ட பொருளை வரையும் திறன், ஒளி, நிழலின் தாக்கத்துடன் வரைதல், முப்பரிமாணம், இரு பரிமாணப் படங்கள் வரைதல், வண்ணங்களைப் பயன்படுத்துதல், அளவுகளைப் புரிந்துகொள்ளல், அன்றாட அனுபவங்களில் உள்ள கருத்துகளை ஞாபகத்திலிருந்து பென்சில் மூலம் வரைதல்...இப்படி மாணவர்களின் ஓவியத் திறனை அறிந்துகொள்ளும் வகையில் இத்தேர்வு இருக்கும். அதையடுத்து நடத்தப்படும் கலை உணர்வு சோதனைத் தேர்வில் (ஏஸ்தெட்டிக் சென்ஸிடிவிட்டி டெஸ்ட்) அப்ஜெக்ட்டிவ் முறையில் 40 கேள்விகள் கேட்கப்படும். அனலிட்டிக்கல் ரீசனிங், மென்டல் எபிலிட்டி, ஆர்க்கிடெக்ச்சுரல் அவேர்னஸ், இமாஜினேட்டிவ் காம்ப்ரிஹென்சன் போன்ற பல்வேறு பிரிவுகளில் மாணவர்களின் கலையுணர்வை சோதனை செய்யும் வகையில் கேள்விகள் இருக்கும். இத்தேர்வு கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படுகிறது. டிராயிங் தேர்வில் ஒவ்வொரு மாணவரின் விடைத்தாளை மூன்று பேர் தனித்தனியே மதிப்பிட்டு மதிப்பெண்கள் வழங்குவார்கள். அதன் சராசரி மதிப்பெண்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
நேட்டா தேர்வில் 40 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். அதாவது 200-க்கு 80 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மாணவர்கள் விரும்பினால், நேட்டா தேர்வை மீண்டும் எழுதலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். கடைசியாக எழுதிய தேர்வு மற்றும் அதற்கு முந்தைய தேர்வின் சராசரி மதிப்பெண்களுடன் மதிப்பெண் சான்றிதழ் கொடுக்கப்படும் என்பதைக் கருத்தில் கொண்டு, மீண்டும் தேர்வு எழுதுவதை முடிவு செய்ய வேண்டும்.. இத்தேர்வு மதிப்பெண்கள் இரண்டு ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். மாணவர்களின் ஸ்கோர் கார்டை இணையதளத்தின் மூலம் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
நேட்டா தேர்வு எப்போது நடைபெறுகிறது?
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நேட்டா தேர்வை எழுதலாம். தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நுழைவுத் தேர்வின் முதல் கட்டத் தேர்வுகள் மார்ச் 14-ஆம் தேதி முதல் மே 25-ஆம் தேதி வரை நடைபெறும். இரண்டாவது கட்டத் தேர்வுகள் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நடைபெறும். தேசிய விடுமுறை நாட்கள் நீங்கலாக மற்ற வார நாட்களில் இத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31-ஆம் தேதிதான் நேட்டா தேர்வின் கடைசி தேதியாக இருக்கும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இத்தேர்வு எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ஆயிரம் ரூபாய். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங்மூலம் கட்டணத்தைச் செலுத்தலாம் அல்லது ஐசிஐசிஐ வங்கியின் கிளைகளில் செலான் மூலமும் செலுத்தலாம். வங்கிகளுக்கான புராசசிங் கட்டணத்தையும் மாணவர்களே செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் சமர்ப்பித்த விண்ணப்பித்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொண்டு, நேட்டா தேர்வு எழுத விரும்பும் மையத்தை அணுக வேண்டும். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில், மாணவர்கள் விரும்பும் தேர்வுக்கான தேதியை பெறலாம். பத்தாம் வகுப்பு மதிப்பெண்.
சான்றிதழின் சான்றொப்பம் பெறப்பட்ட நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒட்டிய விண்ணப்பப் படிவ பிரிண்ட் அவுட், சான்றொப்பம் பெறப்பட்ட அடையாள சான்றிதழ், நேட்டா கட்டணம் செலுத்தியதற்கான ரசீது, இ-மெயில் முகவரி ஆகியவற்றுடன் தேர்வு மையத்தை மாணவர்கள் அணுக வேண்டும். தேர்வு மையத்தில் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான அப்பாயிண்ட்மெண்ட் வவுச்சர் வழங்குவார்கள். அதில் விண்ணப்பதாரரின் ஐடி, அப்பாயிண்ட்மெண்ட் எண், எக்ஸாம் கீ ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். அத்துடன் இரண்டு கவுண்டர் பாயில்களும் இருக்கும். அதில் மாணவர்கள் முன்னதாகவே கையெழுத்திட்டு விடக்கூடாது. தேர்வு அறையில் மேற்பார்வையாளர் முன்னிலையில்தான் அதைக் கையெழுத்திட்டுக் கொடுக்க வேண்டும். அத்துடன் தேர்வு மைய பதிவேட்டில் தேர்வுக்கு முன்னதாகவும் தேர்வு அறையிலிருந்து வெளியேறும் போதும் கையெழுத்திட வேண்டும். இதுகுறித்த விரிவான தகவல்கள் இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.
இந்தத் தேர்வுக்குத் தயாராவது எப்படி?
முன்பயிற்சி தேவையில்லாத அளவுக்குத்தான் நேட்டா தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு கட்டடக்கலை குறித்து குறைந்தபட்ச அறிவோ அல்லது அதுகுறித்து அறியாமலோ இருப்பார்கள் என்பதை உணர்ந்தே இத்தேர்வு நடத்தப்படுகிறது. மாணவர்களின் கலை ரசனை, டிராயிங் திறமை ஆகியவற்றை சோதனை செய்யும் வகையிலேயே நேட்டா தேர்வு இருக்கும். ஆர்க்கிடெக்ச்சுரல் அவேர்னஸ் மாணவர்களிடம் இருக்கிறதா என்பது குறித்தும் சில கேள்விகள் இருக்கும். படிப்பதன் மூலமாகவும் இன்டர்நெட் மூலமாகவும் ஆர்க்கிடெக்கசர் படிக்கும் மாணவர்களிடமும், ஆர்க்கிடெக்டுகளிடமும் இதுகுறித்துக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். ஆங்கிலத்தில் கேள்விகள் இருக்கும். கம்ப்யூட்டர் மூலம் தேர்வை எழுதுவதற்கு கம்ப்யூட்டர் குறித்த அடிப்படைப் பயிற்சி தேவைப்படும். இத்தேர்வுக்கும் பயிற்சி அளித்து மாணவர்களைத் தயார் படுத்த நிறுவனங்களும் இருக்கின்றன. எந்தப் பயிற்சியும் இல்லாமலேயே நேட்டா இணையதளத்தைப் பார்த்து, தாங்களே தயாராகி இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களும் இருக்கிறார்கள். அதேசமயம், தேர்வு மையங்களில் எந்தப் பயிற்சியும் அளிக்க அனுமதிக்கப்படமாட்டாது. ஏனெனில் ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொருவிதமாக வினாத்தாள் இருக்கும். எனவே, நேட்டா தேர்வின் முந்தைய கேள்வித்தாள்களும் மாணவர்களுக்கு வழங்கப்படாது.
பி.ஆர்க் படிப்பில் சேர தனியே விண்ணப்பிக்க வேண்டுமா?
நேட்டா தேர்வை எழுதிய மாணவர்கள், அந்தத் தேர்வு மதிப்பெண்களை வைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட பி.ஆர்க். படிப்பில் அட்மிஷன் பெற முடியும். தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்கு பி.ஆர்க். மாணவர்களைச் சேர்க்க அண்ணா பல்கலைக்கழகம் தனியே கவுன்சலிங் நடத்துகிறது. நேட்டா நுழைவுத் தேர்வில் மாணவர்கள் 200-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதுடன், பிளஸ் டூ தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மொத்த மதிப்பெண்களில் 200-க்கு எவ்வளவு எடுத்துள்ளார்கள் என்பதும் கணக்கிடப்பட்டு பி.ஆர்க். ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு கவுன்சலிங்கிற்கு மாணவர்கள் அழைக்கப்படுவார்கள். எனவே, தமிழ்நாட்டில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களில் பி.ஆர்க். படிப்பில் சேர விரும்பும் மாணவர்களும் நேட்டா நுழைவுத் தேர்வை எழுத மறக்காமல் விண்ணப்பிக்க வேண்டும்.
விவரங்களுக்கு: www.nata.in
Subscribe to:
Posts (Atom)