20 January 2014

பொக்கரோ செயில் நிறுவனத்தில் டெக்னீஷியன் பணி

த்திய அரசின்கீழ் இயங்கி வரும் பொக்கரோ செயில் நிறுவனத்தில் டெக்னீஷியன் பணியில் சேர விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்டோருக்கு 20 காலியிடங்களும், பழங்குடியினருக்கு  31 காலியிடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு  17 காலியிடங்களும், மற்றவர்களுக்கு 63 காலியிடங்களும் உள்ளன. மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், சிவில், இன்ஸ்ட்ருமெண்டேஷன், மெட்டலர்ஜி, கெமிக்கல்,  செராமிக்ஸ் எலக்ட்ரானிக்ஸ் அண்ட்  டெலிகம்யூனிக்கேஷன் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 28க்குள் இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு  5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.50. மற்றவர்களுக்கும் ஓ.பி.சி. பிரிவினருக்கும் கட்டணம் ரூ.250.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பது குறித்த விதிமுறைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.01.2014

விவரங்களுக்குwww.sail.shine.com

ஹெவி கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 186 பணியிடங்கள்

ஹெவி கார்ப்பரேஷன் நிறுவனத்தில் அப்ரண்டீஸ்  டிரெய்னி பணிக்கு விண்ணப்பிக்கலாம். கம்ப்யூட்டர்  சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, மெக்கானிக்கல், புரொடக்‌ஷன், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், சிவில், மெட்டலர்ஜி, இண்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் பி.இ. அல்லது பி.டெக். பட்டம் பெற்றிருக்க  வேண்டும். 28 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.  
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.01.2014
விவரங்களுக்கு: www.hecltd.com

கெயில் நிறுவனத்தில் 65 எக்ஸிக்யூட்டிவ் என்ஜினீயர் பணி

கெயில் நிறுவனத்தில் 65 எக்ஸிக்யூட்டிவ் என்ஜினீயர்  பணிகளில் சேர விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமெண்டேஷன், கெமிக்கல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் பி.இ. அல்லது பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும். மெக்கானிக்கல் பிரிவில் 18 காலியிடங்களும், எலெக்ட்ரிக்கல் பிரிவில் 14 காலியிடங்களும், இன்ஸ்ட்ருமெண்டேஷன் பிரிவில் 13 காலியிடங்களும், கெமிக்கல் பிரிவில் 20 காலியிடங்களும் உள்ளன. 25 வயதிற்குட்பட்டு இருக்க வேண்டும். கேட் 2014 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.01.2014
விவரங்களுக்குhttps://gailebank.gail.co.in

செயில் நிறுவனத்தில் 650 என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.7.5 லட்சம் சம்பளத்தில் வேலை!

மத்திய அரசு நிறுவனமான செயில் நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெயினி பணியிடங்களில் சேர விரும்பும் என்ஜினீயரிங் பட்டதாரி மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

த்திய அரசு நிறுவனமான செயில் என்று அழைக்கப்படும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தில் தொழில்நுட்பப் பிரிவில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணியில் 650 காலியிடங்களும், நிர்வாகப் பிரிவில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணியில் 60 காலியிடங்களும் உள்ளன.

இப்பணிகளில் சேர என்ன தகுதி இருக்க வேண்டும்?
தொழில்நுட்பப் பிரிவு மேனேஜ்மெண்ட் டிரெயினி பணியில் சேர விரும்புபவர்கள் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், மெட்டலர்ஜி, எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமெண்டேஷன், செராமிக்ஸ், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், மைனிங், கெமிக்கல் ஆகிய துறைகளில் ஏதாவது ஒரு துறையில் முழு நேரமாகப் படித்து பி.இ. அல்லது பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்.சி.ஏ. படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். அத்துடன், அனைத்து செமஸ்டர்களிலும் சேர்த்து சராசரியாக 65 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

நிர்வாகப் பிரிவு மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணியில் சேர விரும்புபவர்கள் இளநிலைப் பட்டப் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஹியூமன் ரிசோர்சஸ், பர்சனல் மேனேஜ்மெண்ட் அண்ட் இன்டஸ்ட்ரியல் ரிலேஷன்ஸ், பர்சனல் மேனேஜ்மெண்ட் ஆகிய பாடப்பிரிவுகளில் எம்பிஏ அல்லது மேனஜ்மெண்ட் முதுநிலை டிப்ளமோ படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள்  55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும். எச்ஆர் பணிப் பிரிவுக்கு சேர விரும்புபவர்கள்  ஹியூமன்  ரிசோர்சஸ் அண்ட் ஆர்கனைசேஷனல் டெவலப்மெண்ட்டில் முதுநிலைப் பட்டமும் மார்க்கெட்டிங் பிரிவில் சேர விரும்புபவர்கள் மார்க்கெட்டிங்கில் முதுநிலைப் பட்டமும் மெட்டீரியல் பிரிவில் சேர விரும்புபவர்கள் புரடக்ஷன், ஆபரேஷனஸ், மெட்டீரியல்ஸ், லாஜிஸ்டிக்ஸ், சப்ளை செயின் மேனேஜ்மெண்ட் போன்ற பிரிவுகளில் முதுநிலைப் பட்டமும் பெற்றிருக்க வேண்டும். நிதிப் பிரிவில் சேர விரும்புபவர்கள் சி.ஏ அல்லது ஐ.சி.டபிள்யூ.ஏ. படித்திருக்க வேண்டும். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்தப் பணிகளில் சேர விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பணிகளில் சேர, இந்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் நிலவரப்படி, 30 வயதுக்கு மேல் ஆகி இருக்கக் கூடாது. ஓ.பி.சி. பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு  5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். விண்ணப்பதாரர்களின் மருத்துவ உடல் தகுதியும் கருத்தில் கொள்ளப்படும்.

இந்தப் பணிகளில் சேர எப்படித் தேர்வு செய்யப்படுவார்கள்?
தமிழகத்தில் சென்னை, சேலம், திருச்சி உள்பட பல்வேறு நகரங்களில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இந்த எழுத்துத் தேர்வு வரும் மார்ச் 23-ஆம் தேதி நடத்த  உத்தேசிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பப் பிரிவு மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணியில் சேர விரும்புபவர்களுக்கு காலையிலும் நிர்வாகப் பிரிவு மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணியில் சேர விரும்புபவர்களுக்கு பிற்பகலிலும் தேர்வு நடத்தப்படும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும்.

சம்பந்தப்பட்ட துறை அறிவு, திறன் அறிவு (குவாலிடேட்டிவ் ஆப்டிட்யூட், வெர்பல் எபிலிட்டி, ரீசனிங் அண்ட் ஜெனரல் அவேர்னஸ் ஆகிய பிரிவுகளில் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வுக்கு மொத்தம் 200 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் குரூப் டிஸ்கஷன் மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வுக்கு 60 மதிப்பெண்கள், குரூப் டிஸ்கஷனுக்கு  20 மதிப்பெண்கள், நேர்முகத் தேர்வுக்கு 20 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு தகுதியுடையவர்கள் இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்கள் ஓராண்டு பயிற்சிக்குப் பிறகு பணியில் அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?
ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதனால், விண்ணப்பதாரர்களுக்கு இ-மெயில் அவசியம்.

பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் துறை சார் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100. செயில் இணையதளத்திற்கு  சென்று செலானை டவுன்லோடு செய்து, அதனைப் பயன்படுத்தி பாரத ஸ்டேட் வங்கியில் இந்தக் கட்டணத்தைச் செலுத்தலாம். கட்டணம் செலுத்திய பிறகு Unique Journal Number  மற்றும் Branch Code ஐ வங்கியில் பெற்றுக்கொள்ளவும். செயில் இணையதளத்திற்கு சென்று Unique Journal Number, Branch, புகைப்படம் மற்றும் ஸ்கேன் செய்த தங்களுடைய கையெழுத்தை அப்லோடு செய்து விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் அனுப்ப வேண்டும். தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை குறித்த விரிவான தகவல்கள் இணைய தளத்தில் உள்ளன.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.01.2014
விவரங்களுக்குwww.sail.co.in