Pages
- About Us
- Library Services
- Library Working Hours
- Rules and Regulations
- Collections
- E-Resources
- Open Access Dictionaries/Encyclopedia
- Open Access E-Books
- Open Course Wears
- Open Access IR
- Free IEEE Journals
- Open Access E-Journals
- Open E-Theses
- News Papers
- Ongoing Research Projects
- Centre For Research
- Conferences & Workshops
- Discussion Forums
- BIT Media Library
- NPTEL Video Lectures
- BIT-Library Youtube Channel
- E-Learning Lectures
- UPSC jobs
- TNPSC Jobs
- Educational Loans & Scholarships
- Engineering Calculator
- Photogallery
- GATE preparation Apps & Papers
- E-Question Bank
- Staff Profile
- Contact Address
23 June 2014
எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகள்
சென்னையிலுள்ள தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழகத் துறைகள், சென்னைப் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. பட்டப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்.
எம்.பி.ஏ. படிப்புக்கான கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் இளநிலைப் பட்டம் பெற்றவராக இருக்கவேண்டும். பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பி.பார்ம் ஆகிய தொழில் படிப்புகளில் இளநிலைப் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அரசு ஒதுக்கீட்டுப் பிரிவினராக இருந்தால் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
எம்.சி.ஏ. படிப்புக்கான கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், கணிதத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்து, பட்டம் பெற்றிருக்கவேண்டும். பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும். அரசு ஒதுக்கீட்டுப் பிரிவினராக இருந்தால் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும்.
எம்.சி.ஏ.லேட்டரல் என்ட்ரிக்கான கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், கணிதத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்து பி.சி.ஏ. அல்லது பி.எஸ்சி. பட்டம் பெற்றிருக்க வேண்டும். பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும். அரசு ஒதுக்கீட்டுப் பிரிவினராக இருந்தால் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய டான்செட் 2014 நுழைவுத் தேர்வில் சிறப்பிடம் பெற்றிருக்க வேண்டும்.
10-ஆம் வகுப்பு, பிளஸ் டூ அல்லது டிப்ளமோ படிக்காமல் நேரடியாக பட்டப் படிப்பை முடித்தவர்கள் இந்தப் படிப்பில் சேர முடியாது. தொலைநிலைக் கல்வி முறையில் பி.இ., பி.டெக், எம்.சி.ஏ., எம்.எஸ்சி. பட்டம் பெற்றவர்களும் இப்படிப்பில் சேர முடியாது. பி.இ., பி.டெக். அல்லது எம்.சி.ஏ. படிப்புகளில் லேட்டரல் என்ட்ரி முறையில் படித்து பட்டம் பெற்றவர்கள் நீங்கலாக வேறு படிப்புகளில் லேட்டரல் என்ட்ரி முறையில் படித்து பட்டம் பெற்றவர்களும் இப்படிப்பில் சேர முடியாது.
விண்ணப்பங்களை சென்னை மாநிலக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் அந்தந்த ஊர்களிலுள்ள அரசு கலைக் கல்லூரிகளிலும் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பங்களைப் பெற விரும்புவோர், தேசிய மயமாக்கப்பட்ட அல்லது செட்யூல்டு வங்கியிலிருந்து, ரூ.300-க்கான டி.டி.யை The Secretary, TamilNadu MBA/MCA Admissions 2014, Government College of Technology, Coimbatore’ என்ற பெயரில், கோவையில் மாற்றத்தக்க வகையில் எடுத்து அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.150.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2014
செயில் நிறுவனத்தில் 459 டெக்னீஷியன் டிரெய்னி பணியிடங்கள்
செயில் நிறுவனத்தில் டெக்னீஷியன் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டெக்னீஷியன்
கல்வித் தகுதி: ஆட்டோமொபைல், செராமிக்ஸ், கெமிக்கல், சிவில், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன், மெக்கானிக்கல், மெட்டாலஜி, புரொடக்ஷன் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ சான்றிதழ் அல்லது ஏ.சி. மெக்கானிக், டிரொஃப்ட்மேன், எலெக்ட்ரீஷியன், எலெக்ட்ரானிக் மெக்கானிக், ஃபிட்டர், மெஷினிஸ்ட், மோட்டார் மெக்கானிக், டீசல் மெக்கானிக், டர்னர், வெல்டர் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 28-க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.07.2014
விவரங்களுக்கு: www.sail.co.in
சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு
சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு எழுதுவதற்கும் இந்தியன் ஃபாரஸ்ட் சர்வீஸ் மெயின் தேர்வு எழுதுவதற்கும் தகுதி பெறுவதற்கு இந்த சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வை எழுத வேண்டும்.
இந்திய ஆட்சிப் பணிகளில் உயர் பொறுப்புகளை ஏற்று முக்கியத்துவம் வாய்ந்த நிர்வாகப் பணிகளில் சேர விரும்புபவர்கள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுத வேண்டும். சிவில் சர்வீஸ் தேர்வுகள் மூன்று கட்டமாக நடைபெறுகின்றன. முதலில் பிரிலிமினரி எனப்படும் முதல்நிலைத் தேர்வுகளை எழுத வேண்டும். இத்தேர்வை எழுதியவர்களிலிருந்து தேர்வு பெற்றவர்கள் மெயின் என்ற முதன்மைத் தேர்வை எழுத வேண்டும். இதில் தகுதி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களைப் பொருத்து சிவில் சர்வீஸ் பணிகளில் சேர்க்கப்படுகிறார்கள்.
இத்தேர்வில் ஒரு முறை தேர்வு பெற முடியாமல் போனால் மீண்டும் முதலிலிருந்தே தொடங்க வேண்டும் என்பதுதான் இத்தேர்வின் மிக முக்கியமான அம்சம். ஒரு மாணவர் முதல்நிலைத் தேர்விலும் மெயின் தேர்விலும் தேர்ச்சி பெற்று, நேர்காணல் தேர்வின் முடிவில் தேர்ச்சி பெறாமல் போனால் மீண்டும் முதல் நிலைத் தேர்விலிருந்தே எழுத வேண்டியதிருக்கும். இத்தகைய கடுமையான முறை இருந்தாலும்கூட முதல் முறையிலேயே சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, இந்திய ஆட்சிப் பணிகளில் சேருபவர்களும் இருக்கிறார்கள்.
இத்தேர்வை எழுத விரும்புபவர்கள் ஏதேனும் பட்டப் படிப்பைப் படித்திருக்க வேண்டும். பட்டப் படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். அதேசமயம், மெயின் தேர்வுகளை எழுதுவதற்கு முன்னதாக பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்று, அதற்கான சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும். எம்பிபிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளை முடித்த மாணவர்கள் இன்டர்ன்ஷிப்பை முடிக்காத நிலையில் இருந்தாலும் மெயின் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர். ஆனால், நேர்முகத் தேர்வு நேரத்தில் இன்டர்ன்ஷிப் முடித்து பட்டச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
இத்தேர்வை எழுதும் மாணவர்களுக்கு 21 வயது ஆகி இருக்க வேண்டும். வருகிற ஆகஸ்ட் 1-ஆம் தேதியன்று அவர்களுக்கு 32 வயதுக்கு மேல் ஆகி இருக்கக் கூடாது. அதாவது 1982-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு முன்னதாகவோ 1993-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குப் பிறகோ பிறந்திருக்கக்கூடாது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு ஐந்து ஆண்டுகளும் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு மூன்று ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு உண்டு.
இதேபோல, மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு வயது வரம்பில் சலுகை உண்டு. பொதுப் பிரிவு மாணவர்கள் ஆறு முறை இத்தேர்வை எழுதலாம். ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிகபட்சம் ஒன்பது முறை இத்தேர்வை எழுதலாம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு எத்தனை முறை இத்தேர்வை எழுதலாம் என்கிற வரம்பு எதுவும் கிடையாது. பொதுப் பிரிவைச் சேர்ந்த ஊனமுற்ற மாணவர்கள் ஒன்பது முறை வரை இத்தேர்வை எழுதலாம்.
தற்போது சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வு வருகிற ஆகஸ்ட் 24-ஆம் தேதி நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களிலும் புதுச்சேரியிலும் முதல் நிலைத் தேர்வு எழுதலாம். முதல்நிலைத் தேர்வில் ஏற்கெனவே மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அது நடைமுறையில் இருந்து வருகிறது. அதன்படி, முதல்நிலைத் தேர்வில் இரண்டு தாள்கள் உண்டு. அதில் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு தாளுக்கும் 200 மதிப்பெண்கள். முதல் தாள் பொது அறிவு தொடர்பானது. இரண்டாம் தாள் ஆங்கில மொழி தொடர்பானது.
ஒவ்வொன்றுக்கும் விடையளிக்க இரண்டு மணி நேரம் வழங்கப்படும். தேசிய, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நடப்பு நிகழ்வுகள், இந்தியா மற்றும் இந்திய தேசிய இயக்க வரலாறு, இந்திய, உலகப்புவியியல், இந்திய அரசியல் மற்றும் ஆட்சி ஆளுமை, பொருளாதாரம், சமூக மேம்பாடு, சுற்றுச்சூழல், பல்லுயிர்ப் பெருக்கம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பொதுப் பிரச்சினைகள், பொது அறிவியல் ஆகியவை குறித்து முதல் தாளில் அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். காம்ப்ரிஹென்சன், இன்டர்பெர்சனல் ஸ்கில்ஸ், லாஜிக்கல் ரீசனிங் அண்ட் அனலிட்டிக்கல் எபிலிட்டி, டெசிஷன் மேக்கிங் அண்ட் புராபுளம் சால்விங், ஜெனரல் மென்டல் எபிலிட்டி, பேசிக்நியூமரசி, இங்கிலீஷ் லாங்க்வேஜ் காம்ப்ரிஹென்சன் ஸ்கில்ஸ் ஆகியவை குறித்து, அப்ஜெக்ட்டிவ் முறையிலான கேள்விகள் இரண்டாம் தாளில் இருக்கும்.
கேள்வித்தாள்கள் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் இருக்கும். இங்கிலீஷ் லாங்க்வேஜ் காம்ப்ரிஹென்சன் ஸ்கில்ஸ் தொடர்பான கேள்விகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு எழுதுவதற்கும் இந்தியன் ஃபாரஸ்ட் சர்வீஸ் மெயின் தேர்வு எழுதுவதற்கும் முன்னதாக இந்தப் பொது முதல் நிலைத் தேர்வை எழுதி அதில் தகுதி பெற வேண்டும். இந்த முதல் நிலைத் தேர்வை சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களுடன் ஃபாரஸ்ட் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களும் எழுதுவார்கள்.
கால்நடை மருத்துவ அறிவியல், தாவரவியல், வேதியியல், ஜியாலஜி, கணிதம், இயற்பியல், புள்ளியியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் இளநிலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் இந்தியன் ஃபாரஸ்ட் சர்வீஸ் தேர்வை எழுதலாம். வேளாண்மை, வனவியல் அல்லது பொறியியல் படிப்புகளில் இளநிலைப் பட்டம் பெற்றவர்களும் இத்தேர்வை எழுதலாம். அத்துடன் உடற்தகுதியும் அவசியம். இதற்கான விதிமுறைகளும் முதல் நிலைத் தேர்வுக்கான பாடத் திட்டங்களும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தப் பொது முதல்நிலைத் தேர்வை எழுத விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.100. பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகளுக்குக் கட்டணம் எதுவும் கிடையாது. சிவில் சர்வீஸ் முதல்நிலைப் பொதுத் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் தாங்கள் சிவில் சர்வீஸ் பணிகளுக்கு மட்டும் விண்ணப்பிக்கிறோமா அல்லது இந்தியன் ஃபாரஸ்ட் சர்வீஸ் பணிகளுக்கு மட்டும் விண்ணப்பிக்கிறோமா என்பதைக் குறிப்பிட வேண்டும் அல்லது இந்த இரண்டு பணிகளுக்கும் சேர்த்து இத்தேர்வை எழுதுகிறோமா என்பதையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை ஜூன் 30-ஆம் தேதி இரவு 11.59 மணிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும்.
விவரங்களுக்கு: www.upscoline.nic.in
President of India Launches Rs. 400 crore National Mission on Libraries
President Pranab Mukherjee Monday launched the Rs
400-crore National Mission on Libraries (NML) in New Delhi. Appreciating the
Ministry of Culture for taking the initiative for long-term focus on the
development of libraries, he lauded the efforts to “revamp, re-energize and
reorient the library and information service sector”.
The mission has been set up in keeping with the
recommendations made by the PM-backed National Knowledge Commission.
“Digital libraries open up the possibility of
far more flexible and coherent multimedia collections that are both fully
searchable and browsable in multiple dimensions. As each generation becomes
more in tune with the Internet, their desire to retrieve information as quickly
and easily as possible has increased.
Finding information by simply searching the
Internet is considered much easier and faster than reading an entire book. I am
confident this initiative will largely facilitate the Internet savvy people in
making maximum use of library resources,” he said.
Thanks to: indianexpress.com
Seven Ways to Stand Out as an Applicant
Seven steps to improve your chances of standing out as an applicant to U.S. colleges and universities.
The final stage of the undergraduate and graduate application process yields both relief and stress for prospective students. Applications have been submitted, and now comes a period of time that can be a bit stressful: waiting for the decision of the admissions committee.
1. Relax.
2. Allow enough time.
3. Follow directions.
4. Be professional.
5. Focus on content and presentation.
6. Stay true to yourself.
7. Ask the right questions.
The final stage of the undergraduate and graduate application process yields both relief and stress for prospective students. Applications have been submitted, and now comes a period of time that can be a bit stressful: waiting for the decision of the admissions committee.
Based on our experience reviewing thousands of undergrad and grad school applications over nearly three decades, here are seven ways to help you stand out as an applicant:
1. Relax.
The application process is a major learning experience. Staying positive and calm allows you to be reflective. Worrying and obsessing during the final stages of putting the application together will likely hinder your ability to think clearly and prepare the best application possible.
2. Allow enough time.
Take a few weeks to gather and compile all of the required material. Then check and recheck. Do not wait until the last second before pushing the send button for your application. Believe us; admissions personnel can tell because often there are mistakes, missing information or essays that were clearly written for another program.
3. Follow directions.
Not doing so raises major questions about how the candidate might adhere to policies and procedures once admitted and enrolled. If there is a word limit for essay questions, follow it. If you are asked for two letters of recommendation, do not send more. If you are asked not to follow up via email or phone, don’t.
4. Be professional.
Studying overseas in the United States is a big deal and can be stressful. You should be confident and self-assured, but not to the point of being perceived as overly aggressive, abrasive or demanding. If something goes wrong, keep your cool. This makes a positive impression.
5. Focus on content and presentation.
A candidate might have the greatest standardized test scores, a superb grade point average (GPA) and impressive letters of recommendation. But if the application contains obvious misspellings or grammatical mistakes, it’s going to be a problem. Admissions committees will assume the applicant was not entirely serious about his or her application.
6. Stay true to yourself.
Embellishing your application or making excuses for weaker parts of your application will not help. Presenting yourself in a genuine and honest way is very important. As the saying goes: “Be yourself—everyone else is already taken.
7. Ask the right questions.
It is very disheartening for the admissions staff when applicants ask questions for which answers have been repeatedly provided on the admissions office website or in printed materials. Two of the questions are, “What are your application deadlines?” and “Do you offer financial aid?” They clearly demonstrate either a lack of real interest in an institution or program, or lack of initiative in doing some research, or both. Ask questions that show you took time to thoroughly investigate the program/institution to which you are applying.
Don Martin is a former admissions dean at Columbia, University of Chicago and Northwestern; and author of “Road Map for Graduate Study.”
Wesley Teter is a former regional director for EducationUSA in New Delhi. He is also the editor of the multimedia outreach campaign, 10 Steps to Study in the United States.
Subscribe to:
Posts (Atom)