திருநெல்வேலி மாவட்டத்தில் இயங்கி வரும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சயின்டிஃபிக் அசிஸ்டெண்ட் டிரெய்னி பணிக்கு விண்ணப்பிக்கலாம். இயற்பியல், வேதியியல், கணிதம், புள்ளியியல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.எஸ்சி. பட்டம் பெற்றிருக்க வேண்டும். பிளஸ் டூ வகுப்பில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும்.
25 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியுடையவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 18 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக் காலத்தில் மாதந்தோறும் ரூ.9,300 உதவித்தொகையாக வழங்கப்படும். பயிற்சிக் காலத்தில் அவர்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ப, ‘சயின்டிஃபிக் அசிஸ்டென்ட் பி’ நிலைக்கு பணி நியமனம் செய்யப்படுவர்.
விண்ணப்பத்தை உரிய முறையில் டைப் செய்தோ அல்லது கையால் எழுதியோ சாதாரணத் தபாலில் அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட பிற சான்றிதழ்களின் நகல்களை உரிய அதிகாரிகளிடமிருந்து சான்றொப்பம் பெற்று இணைத்து அனுப்ப வேண்டும். சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் விண்ணப்பத்தில் ஒட்டி அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Manager (HRM),
Nuclear Power Corporation of India Limited,
Kudankulam Nuclear Power Project,
Kudankulam Post, Radhapuram Taluk,
Tirunelveli District, Tamilnadu - 627 106.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.03.2014
விவரங்களுக்கு: www.npcil.nic.in