இந்திய ஆயுள் காப்பீட்டுத் துறையில் 50 ஆண்டுகளைக் கடந்த மிகவும் வெற்றிகரமாக இயங்கி வரும் லைப் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா எல்.ஐ.சி பற்றி நாம் அறிவோம்.
இந்த நிறுவனத்தின் ஒவ்வொரு கோட்டத்திலிருக்கும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய 20 மாணவர்களுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குகிறது.
யாருக்கு கிடைக்கும்: இந்த ஆண்டில் பிளஸ் 2 அல்லது பத்தாம் வகுப்புத் தேர்டிவ எழுதி குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேறி, உயர் படிப்புக்காக தற்போது விண்ணப்பித்துள்ளவர்களுக்கும் கிடைக்கும்.
இவர்களின் பெற்றோர் அல்லது காப்பாளரின் ஆண்டு வருமானம் ரூ.60 ஆயிரத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
எல்.ஐ.சி வழங்கும் மாணவர்களுக்கான உதவித்தையைப் பெற ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எல்.ஐ.சி-யின் இணையதளத்திற்கு சென்று ஸ்காலர்ஷிப் பெதாடர்புடைய கேள்விகளுக்கு முழுமையாகப் பதில் அளிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்களில் தகுதி உடையவர்களுக்கு மட்டும் தொடர்புடைய கோட்டத்திலிருந்து தகவல் கிடைக்கும். அப்போது கோட்ட நிர்வாகம் கேட்கும் உரிய ஆவணங்களுடன் செல்ல வேண்டியிருக்கும்.
முழுமையான தகவல்களுக்கு எல்.ஐ.சி,யின் இணையதளத்தைப் பார்க்கவும்.
இணையதள முகவரி: www.licindia.in