இந்திய கடற்படையில் எக்ஸ்கியூட்டிவ், சப்மெரைன், டெக்னிக் பிரிவுகளில் குறுகிய கால பணியில் டெக்னிக் பிரிவுகளில் குறுகிய கால பணிகளில் சேர விரும்பும் என்ஜினீயரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். திருமணமாகாத ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 191/2 வயதுக்குக் குறையாமலும் 25 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். அதாவது 2-1-1990-க்கு முன்னதாகவோ அல்லது 1.1.1995 தேதிக்குப் பிறகோ பிறந்திருக்கக் கூடாது.
டெக்னிக்கல் மற்றும் சப்மெரைன் பிரிவுக்கு மெக்கானிக்கல், மெரைன், ஆட்டோமொபைல், மெக்கட்ரானிக்ஸ், புரொடக்ஷன், மெட்டலர்ஜி, ஏரோனாட்டிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன், இன்ஸ்ட்ரூமென்டேஷன், பவர் என்ஜினீயரிங், பவர் எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் பி.இ. அல்லது பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும். எக்சிக்யூட்டிவ் பிரிவுக்கு ஏதேனும் ஒரு துறையில் பி.இ. அல்லது பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும். என்.சி.சி.யில் ‘சி’ சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
உடற்தகுதி: குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரத்துடன் தகுந்த எடை இருக்க வேண்டும்.
தேர்வு முறை: இரண்டு பிரிவுகளில் தேர்வுகள் நடக்கும். முதல் பிரிவில் Intelligence test, picture perception, குழு விவாதத் தேர்வும், இரண்டாம் பிரிவில் psychological testing, group testing மற்றும் நேர்காணலும் நடத்தப்படும். இரண்டு பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை?
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழையும், 25kb-க்குள் இருக்கும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தையும் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.
இணையதளத்தில் ‘Apply online’ பிரிவை கிளிக் செய்யவும். பின்னர் ’Office Entry’ பகுதிக்குச் சென்று ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
பூர்த்தி செய்த பின்னர், சரியாக உள்ளதா என சரிபார்த்து பிரிண்ட் அவுட் எடுக்கவும். பிரிண்ட் எடுத்த விண்ணப்பப் படிவத்துடன் கையெழுத்துள்ள பாஸ்போர்ட் சைஸ் போட்டோவையும், பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களையும் சேர்த்து Post Box No. 04, Chankya Puri PO, New Delhi - 110 021என்ற முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்ப உறையின் மேல் ONLINE APPLICATION NO._________APPLICATION FOR SSC X(GS)/HYDRO CADRE/TECHNICAL BRANCH (E/L/SM) - DEC 2014 COURSE Qualification______ Percentage _____%. NCC "C' Yes/No என்று எழுத வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.03.2014
விவரங்களுக்கு: www.nausena-bharti.nic.in