பொதுமக்களுக்கு விரைவாக பாஸ்போர்ட் கிடைக்க வசதியாக, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் சென்னைக்கு வெளியிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதன்படி, நவம்பர் மாதம் பாண்டிச்சேரி மற்றும் கடலூ ரில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
சென்னை, சென்னை புறநகர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், காரைக்கால், கிருஷ்ணகிரி, திருவண்ணா மலை, தருமபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவை, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கட்டுப்பாட் டுக்குள் வருகின்றன.
தினமும் நூற்றுக்கணக் கானவர்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வருவதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதைத் தடுக்கும் விதமாக, சென்னையில் உள்ள வடபழனி, தாம்பரம் மற்றும் அமைந்தகரையில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் (பாஸ்போர்ட் சேவா கேந்திரா) அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் சென்னையில் பல இடங்களில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதன்முறையாக சென்னையைத் தவிர்த்து, இதர இடங்களிலும் சிறப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சி.செந்தில் பாண்டியன் ‘தி இந்து’விடம் கூறியதாவது: பொதுமக்களுக்கு விரைவாக பாஸ்போர்ட் கிடைப் பதற்காக இந்த ஆண்டு துவக்கத் தில் இருந்து இதுவரை 4 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அடுத்த முகாம் நவம்பர் - 1ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
இந்நிலையில், முதன் முறையாக சென்னையை தவிர்த்து, வெளியிடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பாண்டிச்சேரியில் நவ.8 மற்றும் 9 ஆகிய தேதிகளிலும், கடலூரில் நவ.15 மற்றும் 16ம் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்களில், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த சிறப்பு முகாமில் ‘தட்கல்’ திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியாது. அடுத்த கட்டமாக, பிற மாவட்டங்களிலும் இத்தகைய சிறப்பு முகாம்கள் நடத்த தீர்மானிக் கப்பட்டுள்ளது என்றார்.