யாருக்காவது விபத்தோ, உடல்நலக்குறைவோ ஏற்படும்போது உடனடியாக முதலுதவி செய்ய வேண்டும் என்று நினைப்போம். ஆனால் அதைப்பற்றி நமக்கு எதுவுமே தெரிந்திருக்காது. எந்தப் பிரச்சினைக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பதை நாம் யாருமே கற்றுக்கொள்வதில்லை.
அப்படியே முதலுதவி செய்ய முற்பட்டாலும் ஒரு தடுமாற்றம் இருந்து கொண்டேயிருக்கும்! இனி தடுமாறத் தேவையில்லை. தாராளமாக முதலுதவி செய்யலாம். அதற்கு கைகொடுக்கிறது ஒரு APP.
அமெரிக்காவின் செஞ்சிலுவைச் சங்கம் முதலுதவி எப்படித் தருவது என்பதை படங்கள் வீடியோவுடன் விளக்கி APP ஒன்றை வெளியிட்டுள்ளது. உங்கள் போனில் இது இருந்தால் எங்கும் யாருக்கும் முதலுதவிகளை எளிதில் செய்ய முடியும்.
மாரடைப்பில் தொடங்கி ரத்தக்காயங்கள், தீக்காயங்கள், ஆஸ்துமா என உடனடியாக தேவைப்படக்கூடிய பல்வேறு பிரச்சினைகளுக்குமான முதலுதவி முறைகள் இந்த APP இல் எளிய மொழியில் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. வெறும் முதலுதவி மட்டுமல்ல, கூடவே பிரச்சினைக்கேற்ற உடனடி மருந்துகள் என்ன என்பசை் சொன்னாலும், முதலில் ஆம்புலன்ஸை அழையுங்கள் என்கிற அடிப்படையான விஷயத்தையும் பரிந்துரைக்கிறது.
ஒவ்வொருவருடைய மொபைலிலும் கட்டாயம் இருக்க வேண்டிய இந்த APPLICATION கூகுள் ப்ளேஸ்டோரிலும் ஆப்பிள் ஐட்யூன்ஸ் ஸ்டோரிலும் இலவசமாகக் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு பயனாளர்கள் இந்தச் செயலியை தரவிறக்க – http//goo.gl/IBrp4B என்ற இணைப்பை பயன்படுத்தலாம் அல்லது கூகுளில் First Aid American Red Cross APP என்று தேடினாலும் அகப்படும்