Sl. No.
|
Name of the Magazine
|
1
|
Puthiyathalaimurai
Kalvi
|
2
|
Readers
Digest
|
3
|
Competition
Success Review
|
4
|
Tamil
Computer
|
5
|
India
Today (Tamil & English)
|
6
|
Health
|
7
|
Pasumai
Vikatan
|
8
|
Doctor
Vikatan
|
9
|
Success
|
10
|
The
Week
|
11
|
Electronics
for You
|
12
|
Outlook
|
13
|
PC
Quest
|
14
|
Mutharam
|
15
|
Kalkandu
|
Pages
- About Us
- Library Services
- Library Working Hours
- Rules and Regulations
- Collections
- E-Resources
- Open Access Dictionaries/Encyclopedia
- Open Access E-Books
- Open Course Wears
- Open Access IR
- Free IEEE Journals
- Open Access E-Journals
- Open E-Theses
- News Papers
- Ongoing Research Projects
- Centre For Research
- Conferences & Workshops
- Discussion Forums
- BIT Media Library
- NPTEL Video Lectures
- BIT-Library Youtube Channel
- E-Learning Lectures
- UPSC jobs
- TNPSC Jobs
- Educational Loans & Scholarships
- Engineering Calculator
- Photogallery
- GATE preparation Apps & Papers
- E-Question Bank
- Staff Profile
- Contact Address
28 July 2014
LIST OF PRINT MAGAZINES SUBSCRIBED FOR OUR LIBRARY
LIST OF PRINT JOURNALS SUBSCRIBED FOR OUR LIBRARY
Sl. No.
|
Name of the Journal
|
1
|
Indian Journal of
Human Genetics
|
2
|
Indian Journal of
experimental Biology
|
3
|
Indian Journal of
Biotechnology
|
4
|
Journal of Plant
Bio-Chemistry & Bio-technology
|
5
|
Indian Journal of
Medical Microbiology
|
6
|
Chemical Engineering
Progress
|
7
|
Hydrocarbon
Processing
|
8
|
Indian Drugs
|
9
|
Indian Journal of Physiology & Pharmacology
|
10
|
Indian Journal of
Pharmacology
|
11
|
IDMA Bulletin
|
12
|
Indian Journal of
Chemistry Sec A
|
13
|
Indian Journal of
Chemistry Sec B
|
14
|
Nandhini Chemical
Journal
|
15
|
Current Science
|
16
|
|
17
|
Chemical Weekly
|
16 July 2014
15 July 2014
பவர் கிரிட் கார்ப்பரேஷனில் ஃபீல்டு சூப்பர்வைசர் பணியிடங்கள்
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் ஃபீல்டு சூப்பர்வைசர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஃபீல்டு சூப்பர்வைசர்
கல்வித் தகுதி: சிவில், எலெக்ட்ரிக்கல் துறையில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 29-க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.07.2014
விவரங்களுக்கு: www.powergridindia.com
முதலுதவி நம் கையில்!
யாருக்காவது விபத்தோ, உடல்நலக்குறைவோ ஏற்படும்போது உடனடியாக முதலுதவி செய்ய வேண்டும் என்று நினைப்போம். ஆனால் அதைப்பற்றி நமக்கு எதுவுமே தெரிந்திருக்காது. எந்தப் பிரச்சினைக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பதை நாம் யாருமே கற்றுக்கொள்வதில்லை.
அப்படியே முதலுதவி செய்ய முற்பட்டாலும் ஒரு தடுமாற்றம் இருந்து கொண்டேயிருக்கும்! இனி தடுமாறத் தேவையில்லை. தாராளமாக முதலுதவி செய்யலாம். அதற்கு கைகொடுக்கிறது ஒரு APP.
அமெரிக்காவின் செஞ்சிலுவைச் சங்கம் முதலுதவி எப்படித் தருவது என்பதை படங்கள் வீடியோவுடன் விளக்கி APP ஒன்றை வெளியிட்டுள்ளது. உங்கள் போனில் இது இருந்தால் எங்கும் யாருக்கும் முதலுதவிகளை எளிதில் செய்ய முடியும்.
மாரடைப்பில் தொடங்கி ரத்தக்காயங்கள், தீக்காயங்கள், ஆஸ்துமா என உடனடியாக தேவைப்படக்கூடிய பல்வேறு பிரச்சினைகளுக்குமான முதலுதவி முறைகள் இந்த APP இல் எளிய மொழியில் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. வெறும் முதலுதவி மட்டுமல்ல, கூடவே பிரச்சினைக்கேற்ற உடனடி மருந்துகள் என்ன என்பசை் சொன்னாலும், முதலில் ஆம்புலன்ஸை அழையுங்கள் என்கிற அடிப்படையான விஷயத்தையும் பரிந்துரைக்கிறது.
ஒவ்வொருவருடைய மொபைலிலும் கட்டாயம் இருக்க வேண்டிய இந்த APPLICATION கூகுள் ப்ளேஸ்டோரிலும் ஆப்பிள் ஐட்யூன்ஸ் ஸ்டோரிலும் இலவசமாகக் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு பயனாளர்கள் இந்தச் செயலியை தரவிறக்க – http//goo.gl/IBrp4B என்ற இணைப்பை பயன்படுத்தலாம் அல்லது கூகுளில் First Aid American Red Cross APP என்று தேடினாலும் அகப்படும்
சிட்பி வங்கியில் உதவி மேலாளர் பணி
இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கியில் (Small Industries Development Bank of India) உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்டோருக்கு 12 காலியிடங்களும், பழங்குடியினருக்கு 6 காலியிடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 21 காலியிடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 18 காலியிடங்களும் உள்ளன.
இந்தப் பணிகளில் சேர ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இந்தப் பணிகளில் சேர ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இந்த ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 21 வயதுக்குக் குறையாமலும் 28 வயதுக்கு மேற்படாமலும் இருக்கவேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு சிட்பி வங்கி மூலம் தேர்வுப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இத்தேர்வுப் பயிற்சி 8 நாட்கள் நடைபெறலாம்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/-(ஓ.பி.சி. மற்றும் பொதுப் பிரிவினருக்கு), தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.07.2014
விவரங்களுக்கு: www.sidbi.in
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கலாம்!
ஓபன் சோர்ஸ் சாஃப்ட்வேர் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை ஆன்லைன் மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கலாம்.
தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ந்து வரும் முக்கியத் துறை. தற்போது, கம்ப்யூட்டர் துறையிலும் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் ஓபன் சோர்ஸ் சாஃப்ட்வேர்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எனவே, இது தொடர்பான தொழில்நுட்பங்கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளன. ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேர்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருள்களும் அதுதொடர்பான புதிய தொழில்நுட்பங்களும் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப ஓபன் சோர்ஸ் சாஃப்ட்வேர் குறித்து அறிந்த தொழில்நுட்பவியலாளர்கள் தேவைப்படுகிறார்கள். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் - ஓபன் சோர்ஸ் சாஃப்ட்வேர் அதாவது MSc (CS-FOSS) என்ற படிப்பை சில ஆண்டுகளாக நடத்தி வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் தங்களது தகுதியை உயர்த்திக் கொள்ளவும் இந்த ஆன்லைன் படிப்பு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட்டப் படிப்பில் கணிதம் அல்லது புள்ளியியல் பாடத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்த மாணவர்கள் சேரலாம். பிளஸ் டூ நிலையில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்து, ஏதாவது ஒரு பட்டப் படிப்பு படித்த மாணவர்களும் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். பிசிஏ மற்றும் என்ஜினீயரிங் பட்டதாரி மாணவர்களும் இந்தப் படிப்பில் சேரலாம். ஆன்லைன் மூலம் நடத்தப்படும் படிப்பு என்பதால் வேலையில் இருப்பவர்களும் இந்தப் படிப்பில் சேரலாம். பிசிஏ, பிஎஸ்சி படித்துவிட்டு சாஃப்ட்வேர் மற்றும் ஐ.டி. நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் தங்களது தகுதியை உயர்த்திக்கொள்ள இந்தப் படிப்பு உதவியாக இருக்கும். அதற்காகப் பணியை விட்டு விட்டோ அல்லது விடுமுறை எடுத்துக் கொண்டோ இந்தப் படிப்பைப் படிக்க வேண்டியதில்லை. சாஃப்ட்வேர் அல்லது ஐ.டி. அல்லாத வேறு துறைகளில் என்ஜினீயரிங் படிப்புகளைப் படித்து விட்டு, சாஃப்ட்வேர் மற்றும் ஐ.டி. துறைகளில் வேலை செய்ய விரும்பும் மாணவர்களுக்கு இந்தத் துறை சார்ந்த படிப்பைப் படித்து, தங்களது தொழில்நுட்பத் தகுதியை உயர்த்திக் கொள்வதற்கான களமாக இந்தப் படிப்பு அமையும். இதுவரை வேலை கிடைக்காத என்ஜினீயரிங் மற்றும் அறிவியல் பட்டதாரிகள் இந்தப் படிப்பின் மூலம் தங்களது வேலைவாய்ப்புக்கான சாத்தியங்களை உயர்த்திக் கொள்ள முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படிப்பில் சேர நுழைவுத் தேர்வு எதுவும் கிடையாது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வித் துறை மூலம் நடத்தப்படும் இந்த ஆன்லைன் படிப்புக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை குரோம்பேட்டை எம்ஐடி வளாகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் - கேபிசி ஆராய்ச்சி மையம் மேற்கொள்கிறது. வாரத்தில் இருமுறை ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும். இதன் மூலம் துறை சார்ந்த பேராசிரியர்களும் நிபுணர்களும் வகுப்புகள் எடுப்பதை ஆன்லைன் மூலம் கேட்டுக் கற்க முடியும். தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை ஆன்லைன் மூலம் கேட்டுத் தெளிவு பெறலாம் அல்லது இ-மெயில், சாட்டிங் மூலம் தொடர்புகொண்டு விளக்கம் பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் படிப்பை மாணவர்களுக்கு ஆர்வமிக்கதாக்கும் வகையில் இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு ஸ்லைடுகள், ஆடியோ, வீடியோ வடிவில் பாடங்கள் வழங்கப்படுகின்றன. அத்துடன், அடிப்படைத் தொழில்நுட்பங்கள் குறித்து தரம் வாய்ந்த சில புத்தகங்களையும் மாணவர்கள் வாங்கிப் படிக்கலாம். இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு செய்முறைக்கும் புராஜக்ட்டுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.
மாணவர்கள் இந்தப் படிப்பை இரண்டு ஆண்டுகளில் நான்கு செமஸ்டர்களில் முடிக்க வேண்டும். அதேசமயம், மாணவர்கள் விரும்பினால் மேலும் கால அவகாசம் எடுத்துக் கொண்டு படிக்கவும் அனுமதிக்கப்படுகிறது. அதாவது 6 ஆண்டுகளுக்குள் (12 செமஸ்டர்கள் வரை) இந்தப் படிப்பை முடிக்கலாம். இந்தப் படிப்பில் சேரும் மாணவர்கள், குறிப்பிட்ட செமஸ்டரில் படிக்க விரும்பவில்லை அல்லது அதற்குப் போதிய அவகாசம் இல்லை என்றால் அந்த செமஸ்டரில் படிப்பிலிருந்து விலகிக்கொண்டு அடுத்த செமஸ்ட்ரில் படிக்கலாம். வேலையில் இருந்துகொண்டு படிக்கும் மாணவர்களுக்கு இந்த நடைமுறை உதவியாக இருக்கும்.
இந்தப் படிப்பில் சேரும் மாணவர்கள் கேமராவுடன் கூடிய லேப் டாப் அல்லது டெஸ்க் டாப் வைத்திருக்க வேண்டும். அதற்கு இன்டர்நெட் வசதியும் தேவை. இதன் மூலம், ஆன்லைன் மூலம் நடத்தும் பாடங்களைக் கேட்டு, தங்களது சந்தேகங்களைக் கேட்டு விளக்கம் பெற முடியும். இந்தப் படிப்புக்குத் தேவையான ஓபன் சோர்ஸ் சாஃப்ட்வேர்களை மாணவர்களின் கம்ப்யூட்டரில் டவுன்லோடு செய்வதில் பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பு மையம் தேவையான உதவிகளை வழங்கும்.
வாரத்தில் இரண்டு நாட்கள் குறிப்பாக மாலை நேரங்களிலோ அல்லது விடுமுறை நாட்களிலோ ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும். 60 நிமிடங்களிலிருந்து 90 நிமிடங்கள் வரை ஒரு வகுப்பு இருக்கலாம். ஒவ்வொரு பாடத்திற்கும் 25 வகுப்புகளிலிருந்து 30 வகுப்புகள் வரை இருக்கும். இந்த ஆன்லைன் வகுப்புகளுக்கு 50 சதவீத வருகைப் பதிவு இருக்க வேண்டும். தியரி வகுப்புகளுடன் செயல்முறை விளக்க வகுப்புகளும் நடத்தப்படும். இதுதவிர வகுப்பறைத் தேர்வுகள், அசைன்மெண்ட்டுகள் போன்றவற்றின் அடிப்படையில் அகமதிப்பீடும் இருக்கும். மாணவர்களுக்காக வகுப்புகள் நடத்தப்படும் நேரங்களில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடங்களைக் கவனிக்கிறார்களா என்பதும் கண்காணிக்கப்படும். ஒவ்வொரு செமஸ்டர் முடிவிலும் எழுத்துத் தேர்வுகளை தேர்வு மையங்களில் எழுத வேண்டியதிருக்கும். பாடத்திட்டங்கள், இந்தப் படிப்பு குறித்த விரிவான விவரங்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த ஆன்லைன் முதுநிலை பட்டப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு முதல் செமஸ்டர் கட்டணம் ரூ.29,500. பிற மாநில மாணவர்களுக்கு கட்டணம் ரூ.30 ஆயிரம். இரண்டாவது செமஸ்டரிலிருந்து கட்டணம் ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பங்களைப் பிரிண்ட் அவுட் எடுத்து அதில் புகைப்படத்துடன் மாணவர்களின் கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.100. ‘The Director, Centre for Distance Education, Anna University, Chennai – 600 025 என்ற பெயருக்கு டிமாண்ட் டிராப்ட் எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 11-08-2014க்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
விவரங்களுக்கு: http://www.annuniv.ecu/cde
Subscribe to:
Posts (Atom)