ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் எக்ஸிகியூட்டிவ் என்ஜினீயர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
சிவில், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், என்விரான்மெண்டல், இன்ஸ்ட்ருமென்டேஷன், மெக்கானிக்கல், புரடெக்ஷன் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
11.04.2014-ஆம் தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/- (ஓ.பி.சி. மற்றும் பொது பிரிவினருக்கு), ரூ.100/- (மற்றவர்களுக்கு).
தேர்ந்தெடுக்கப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். அப்ஜெக்ட்டிவ் முறையில் நடைபெறும் தேர்வில், தாங்கள் படித்த படிப்பு தொடர்புடைய பாடத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படும். அத்துடன், ஜெனரல் அவேர்னஸ் மற்றும் ஆப்டிட்யூட் முறையிலும் கேள்விகள் கேட்கப்படும். 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். எழுத்துத் தேர்வில் சிறப்பிடம் பெறுவோருக்கு நேர்முகத் தேர்வும், உளவியல் தேர்வும் நடைபெறும். எழுத்துத் தேர்வுக்கு 60 மதிப்பெண்களும், நேர்முகத் தேர்வுக்கு 15 மதிப்பெண்களும், தகுதித் தேர்வுக்கு 25 மதிப்பெண்களும் ஆக மொத்தம் 100 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
சென்னை, பெங்களூரு, அகமதாபாத், ஹைதராபாத், தில்லி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட 14 நகரங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
சென்னை, பெங்களூரு, அகமதாபாத், ஹைதராபாத், தில்லி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட 14 நகரங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.04.2014
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 22.06.2014
விவரங்களுக்கு: www.ongcindia.com