திருச்சி, அகர்தலா, அலகாபாத், போபால், கோழிக்கோடு, துர்காபூர், ஜாம்ஷெட்பூர், குருஷேத்ரா, ராய்ப்பூர், வாரங்கல் போன்ற இடங்களில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் (என்.ஐ.டி.) எம்.சி.ஏ. படிக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
இப்படிப்பில் சேர அகில இந்திய அளவில் நடத்தப்படும் NIMCET 2014 நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இந்த ஆண்டுக்கான நுழைவுத் தேர்வை அகர்தலாவில் உள்ள என்.ஐ.டி. நடத்துகிறது.
விண்ணப்பிப்பது எப்படி?: பொதுப் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1,800. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு கட்டணம் ரூ.900. பாரத ஸ்டேட் வங்கி கவுண்டரில் செலுத்தி இ-ரசீது பெற வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, பிரிண்ட் அவுட் எடுத்து இ-ரசீதுடன், தேவையான இதர ஆவணங்களையும் இணைத்து பதிவுத் தபாலில் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவேண்டும்.
The Secretary,
NIMCET 2014,
National Institute of Technology Agartala,
Barjala, Jirania 799046, Tripura (W).
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 03.04.2014
நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: 25.05.2014
விவரங்களுக்கு: www.nimcet2014.nita.ac.in