Pages

Resource

30 December 2014

போட்டித் தேர்வு பயிற்சிக்கு ஜனவரி 6-க்குள் விண்ணப்பிக்கலாம்: அண்ணா ஐ.ஏ.எஸ். அகாடமி தகவல்

அண்ணா ஐ.ஏ.எஸ். அகாடமி சார்பில் ஐஏஎஸ், ஐபிஎஸ், டிஎன்பிஎஸ்சி குரூப்-1, எஸ்ஐ, ஃபாரஸ்டர் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக அகாடமி யின் நிறுவனர் எம்.எப்.கான் கூறியதாவது:
இப்பயிற்சியை முழுநேர படிப்பாகவோ, பகுதி நேரமாகவோ (சனி, ஞாயிறு, அரசு விடுமுறை தினங்களில் - காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை) பெறலாம். ஃபாரஸ்டர் தேர்வுக்கான பயிற்சி ஜனவரி 11-ம் தேதி தொடங்கி 40 நாட்கள் நடைபெறும். தேர்வு 22.2.2015 அன்று நடைபெறும்.
இரு பாலருக்கும் தனித்தனியே தங்கும் விடுதி வசதி உண்டு. மாணவர் சேர்க்கைக்கு எவ்வித நுழைவுத் தேர்வும் கிடையாது. பல்வேறு போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டவர்கள், முதுகலை படிப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பயிற்சி சேருவதற்கான விண்ணப்பப் படிவத்தை ரூ.100 செலுத்தி அண்ணா ஐ.ஏ.எஸ். அகாடமி, எண்.8, இரண்டாவது தெரு, நியூ காலனி, ஆதம்பாக்கம், சென்னை-88 என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 6.1.2015. மேலும் விவரங்களுக்கு 044-22602892, 9840259611 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு கான் கூறினார்.